Header Ads



என்றோ ஒருநாள் நாங்கள் மரணித்த, பிறகேனும் உன்மைகள் வெளிவரும் - ஹரீன்


இன்று(19) எதிரக் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்த கருத்துக்கள்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம்,இலங்கைக்கு இந்தியவுடன் உள்ள ஓர் பிரச்சிணையல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவிற்கு வழங்குவதில் இல்லை பிரச்சிணை.

“அதானி” என்ற நிறுவனத்திற்கே வழங்கப் போகிறார்கள் என்ற விடயத்திற்குப் பின்னாலுள்ள விடயங்களை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.வரலாற்று ரீதியாக கொழும்பு துறைமுகம் முக்கியத்துவமிக்கதாகும்.மூன்று முனையங்கள் உள்ளன.ஜெ.சி.டி.,எஸ்.ஜெ.டி மற்றையது இந்தியாவிற்கு வழங்கியுள்ள ஈ.சி.டி என்பனவாகும்.

இதில் உள்ள ஆபத்து என்வென்றால்,டரான்சிப்ட் எனப்படும் பெரிய கப்பலிலிருந்து பொருட்கள் இலங்கை கொழும்புத் துறை முகத்தில் இறக்கப்பட்டு அதிலிருந்து சிறிய கப்பல்கள் மூலம் சூழவுள்ள நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவிற்கு,பங்களதேஷிற்கு,

பாகிஸ்தானுக்கு பொருட்களை பகிர்வது என்ற இந்த விடயத்தில் தான் பிரச்சிணையுள்ளது.இந்த உரிமை,இந்த வாய்ப்பு இல்லாமலாக்கப்படப் போகிறது.உலகில் முன்னனி ஐந்து துறைமுகங்கள் அதன் நிருவனங்கள் ஒரு வித தனியார்மயமாக்கல் திட்டத்தில் தான் செயற்படுகின்றன.இவை ஒரு போதும் ஆட்சி செயன்முறைகளில் பங்கு பற்றுவதில்லை.இலங்கை டெலிகொம் நிறுவனத்தை மலேஷியாவிற்கு பங்கு வழங்குவது போன்று இது தொழிநுட்பம் சார்ந்த ஒர் கொடுக்கல் வாங்கள் அல்ல.துறை முகம். இயற்கையான கடல் ஆழம் கொண்ட துறைமுகம் தான் கொழும்புத் துறைமுகம். இது நாட்டிற்கும் பூகோல ரீதியாக மூலோபாயமிக்க கொடையாகும்.

அதானி நிறுவனத்திற்கு மும்பை நகரத்திற்கு சற்று அருகாமையில் “முந்த்ரா” என்ற ஒர் துறைமுகம் உள்ளது.முழுமையாக அதானி நிறுவனத்திற்கு செந்தமானதாகும்.இந்தியா துறைமுகங்கள் விடயத்தில் உன்னிப்பாக இருக்கிறது.கிழக்கு முனையமும் அதானிக்கு வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் கிழக்கு முனையத்திற்கு வரும் பெரிய கப்பல் பொருட்கள் பரிமாற்றத்தை நேரடியாக “முந்த்ரா” துறைமுகத்திற்கு மாற்றி அந்தத் முறைமுகத்தை மூலோபாயமிக்க துறைமுகமாக காலப்போக்கில் மாற்றும் திட்டத்தை தான் அவர்கள் கொண்டுள்ளனர்.இதனால் பாதிக்கப்படுவது வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற கொழும்புத் துறைமுகம் பெறுமானமற்ற ஒன்றாக மாறும் அபாயம், இதன் பின்னால் உள்ளது. இதை நாங்கள் அரசியல் காரணங்களுக்காகக் கூறவில்லை மாறாக நாடு என்ற அடிப்படையில் கூறுகிறோம்.

கொழும்பு துறை முகத்திற்கு வரும் 55 % பெரிய கப்பல்கள் எம்.எஸ்.சி என்ற கப்பல்களாகும்.இந்த எம்.எஸ்.சி என்ற கப்பல் குழுமத்துடன் அதானி நிறுவனம் ஒர் இணை திட்டத்தை ஏலவே செயற்ப்படுத்தி வருகிறது.அப்படி நோக்கினால் கொழும்புத் துறை முக சகல முனையங்களுக்கும்  வரும் எம்.எஸ்.சி கப்பல்களின் மொத்த எண்ணிக்கையில் பொரும்பாலானவை அதாவது 70% பங்கு,உரிமம் அதானிக்கு போகிறது.காரணம் கிழக்கு முனையம் அதானிக்கு வழங்கி விட்டனர்.அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) மற்றும் பிரதான கணக்காய்வு அதிகாரி (CFO) என்பனவும் அதானி நிறுவனத்திற்கே உரித்துடையது.அவர்கள் தான் இதை நிர்வகிக்கப் போகிறார்கள்.

இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதிலுள்ள பிரச்சிணை அதன் சட்ட திட்டங்களும், வரையறைகளுமாகும்.இது தான் ஆபத்து. எம்.எஸ்.சி கப்பல்களோடு அதானிக்குள்ள இணைப்பு காரணமாக கொழும்பு துறைமுகத்தின் சீனாவிற்கு வழங்கியுள்ள முனைய வருவாய் மற்றும் இலங்கை தனியார் நிறுவன நிர்வாகத்திற்குள் உள்ள அடுத்த முனைய வருவாய் சகலதும் அதானிக்கு இலாபங்களைப்

பெற்றுத் தரும். கிழக்கு முனையத்திற்கு இதனால் எந்த வித சர்வதேச போட்டித் தன்மையும் ஏற்படப் போவதில்லை.எனவே அதானிக்கு வழங்குவதற்கு முன்னர் பேட்டித் தன்மையை அதிகரிக்கக் கூடிய ஏனைய உபாயங்கள் குறித்து அரசாங்கம் சிந்தித்திருக்க வேண்டும். இது அரசாங்கத்திற்கு விளங்காமல் இல்லை.விளங்கிக் கொண்டே தெளிவான டீல் மேற்கொண்டுள்ளது. இது சாதாரன டீல் அல்ல மொகா டீல் என்று கூறிய அவர்;

ஹம்பாந்தோட்டை துறைமும் நிர்மானிக்கும் போது இதை இலக்காகக் கொண்டு இந்தியா தமிழ் நாட்டில் நிர்மானித்த வாலப்படம் துறைமுகத்தையும், மணல் குவிவதால் ஏற்பட்ட அதன் தோல்வி குறித்தும் சுட்டிக் காட்டினார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;ஈஸ்டர் தாக்குதல் குறித்து இன்று உன்மைகள் மறைக்கப்படுவதாகவும்,நாம் எல்லோரும் ஏதோ ஒரு கடவுளை வனங்குபவர்கள் என்ற அடிப்படையில் இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள், பின்னால் இருந்தவர்கள் என்ற சகலதும் கடவுளின் பொயரால் எப்போதாவது இதன் உன்மைகள் வெளிப்படும் வெளிப்படும் வெளிப்படும் என்று கூறினார்.என்றோ ஒரு நாள் நாங்கள் மரணித்த பிறகேனும் இதன் உன்மைகள் வெளிவரும் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.