January 21, 2021

பிக்ஹு நூல்கள் என்ன, மஞ்சள் புத்தகங்களா..?

- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் -

இஸ்லாமிய சட்டத் தொகுப்பான பிக்ஹு என்பது ஒரு முஸ்லிமின் அன்றாட வாழ்வுடன் பிரிக்கமுடியாத ஒன்றரக்கலந்த ஒன்றாகும். இது அல் குர்ஆன், அஸ் ஸுன்னா, அல் இஜ்மாஃ மற்றும் அல் கியாஸ் என்ற மூலாதாரங்களின் ஒளியில் அதற்குத் தகுதிபெற்ற சட்டவல்லுனர்களான புக்கஹாக்களினது அயராது உழைப்பினாலும் முயற்சியினாலும் இஜ்திஹாதினாலும் பெறப்பட்ட அல்லாஹ்வின் அருளே மேற்படி பிக்ஹு கலையாகும்.

குறிப்பாக நான்கு முஜ்தஹிதான இமாம்கள் மற்றும் ஏனைய சட்டவல்லுனர்களின் தொகுப்புக்களாகப் பாதுகாக்கப்பட்டு உலக முஸ்லிம்களால் மரியாதை கலந்த பாதுகாப்பில் உள்ளது என்பது புதுக்குருதி சின்னஞ்சிறார்களுக்கும் தெரியும். 

அன்னாற வாழ்வில் ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது, ஒரு சாதராண முஸ்லிம் கூட பிக்ஹின் ஒளியிலேயே அதற்கான தெளிவினைத் தேடமுற்படுவதும் பிக்ஹு சட்டம் கற்றுத்தேறிய ஓர் அறிஞரிடம் அது பற்றித் தெளிவுபெற எத்தனிப்பதும் உலக முஸ்லிம்களின் வழமையாகும்.

ஒரு சிலர் தம்மை அஹ்லுல் ஹதீஸ் என்று இனம்காண்பித்த போதிலும் அவர்களால் பிக்ஹை விட்டும் செல்ல முடியாதுள்ளது.

எனவேதான் தமது நூலகங்களில் பிக்ஹு நூல்களை சேமித்துவைத்துள்ளனர். இல்லையெனில், அல் குர்ஆனையும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களையும் மாத்திரமே அவர்கள் நூலகங்களிள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். ஏன் பிக்ஹு நூல்களை பாதுகாத்து வைத்துள்ளனர்?

ஒருவர் பிக்ஹின் பெறுமதியை விளங்கிக்கொள்வதற்கு தனக்குத் தெரிந்த தன்னோடு குரோதநிலையில் உள்ள ஒருவரைப் பார்த்துப் புரிந்துகொள்ள எத்தனிக்கக்கூடாது; மாறாக, முஜ்தஹிதான இமாம்களின் அறிவு ஆளுமை, இஜ்திஹாத் திறனாய்வு, நினைவாற்றல், வணக்க வழிபாடுகள், இராவணக்கங்கள், இறைதியானம் மற்றும் பண்பாட்டு நாகரிகம் அவர்கள் கொண்டிருந்த ஒழுக்கவிழுமியங்கள் போன்றவற்றின் ஊடாகவே நோக்க வேண்டும்.


 இதுவே ஓர் அறிஞருக்கான அணுகுமுறையாகும். 

அதனை விட்டு விட்டு, எவரோ ஒருவர் தனக்குப் பரிட்சயமில்லாத ஒரு கருத்தினை முகநூலில் அல்லது சமூகவலைத்தளங்களிள் பகிர்ந்துவிட்டதும் அவரை ஒரு சட்டவல்லுனரின் இடத்தில் வைத்து நோக்குவதும் ஒட்டுமொத்த பிக்ஹு மற்றும் புக்கஹாக்களை ஏளனமாகப் பேசுவதும் ஆபத்தானவையாகும்.

மஞ்சள் பத்திரிகை அல்லது மஞ்சள் இதழ் என்பது பெருமளவாகவோ முழுதாகவோ பொய்கலந்த செய்தியுடன், வெறும் கவர்ச்சிக்காகத் தலைப்பிட்டு இலாபம் ஈட்டும் நோக்கோடு வெளிவரும் ஒரு வகையான இதழாகும்.

இதனை நச்சு இதழ் என வகைப்படுத்துகிறார்கள்.

பொதுவாக மிகைப்படுத்திய செய்திகள், புரட்டான செய்திகள், கிளர்ச்சியூட்டும் செய்திகள் கொண்டவையாகயிருக்கும்.

ப்ராங்க் லூத்தர்மோட் (1941) வரையறையின் படி மஞ்சள் இதழின் ஐந்து பண்புகள் பின்வருமாறு :

சிறிய செய்தியாக இருந்தாலும் அச்சுறுத்தும் பெரிய தலைப்பிடல்.

படங்களையும் வரைபடங்களையும் பகட்டாக வெளியிடல்.

போலிவல்லுநர்கள் மூலம் போலியான நேர்காணல்கள், தவறான தலைப்பு, போலி அறிவியல், தவறான தகவல்களிடல்.

நகைப்பூட்டும் பட்டைகளுடன் முழுவண்ண ஞாயிறு சேர்க்கைகள்.

அமைப்புக்கு எதிராகபோராடி தோல்வியுற்றவர் மூலம் அனுதாபம் ஈட்டல்.

சகேதரர் யாஸிர் ளஹீர் அவர்களின் அல்லது அவர் போன்ற நவீனத்துவம் பேசுவோர்  பார்வையில் எமது பாரம்பரிய பிக்ஹு நூல்கள் எவ்வகையான வரையறையின் பிரகாரம் மஞ்சள்  புத்தகமாக கனிக்கப்படுகிறது? மஞ்சள்  புத்தகம் என்று வரணித்து கேவலப்படுத்தியது எத்தகைய பிக்ஹை என்பதை பகிரங்கமாக சொல்ல முடியுமா?

மஞ்சளித்துப் போன உங்கள் பழைய பிக்ஹு புத்தகங்கள் என்று நாடப்படுபவை எவை?

சிறப்புவாய்ந்த இக்கலையை இவ்வாறு கொச்சைப்படுத்துவது தகுமானதா?

8 கருத்துரைகள்:

Still this sheikh....not understand the point... You can learn more how to understand a simple article...Dear Sheikh pls..

அப்போது ஏனப்பா அதை மொழி பெயர்க்காது இருக்கிறீர்கள்தமிழில் மொழிபெயர்த்து அனைவரும் வாசிக்க அனுமதியுங்கள்... அப்போது தான் உங்கள் பிக்ஹ் சட்டம் எந்த லெவலில் இருக்கிறது என மக்கள் அறிவர்

JM, please refrain from publishing his articles, he is an absolute bigot.

முல்லா நாகூர் ழரீப் அவர்களே யாஸிர் ளஹீர் போன்ற குறை புத்திகளுக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் அவரது ஆக்கத்தை பார்த்து விட்டு பதில் எழுத நானும் நினைத்து விட்டு وإذا خاطبهم الجاهلون قالوا سلاما என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஞாபகப்படுத்தியவனாக பின் வாங்கி விட்டேன்
يمرقون من الدين كما يمرق السهم من الرمية என்று இவன் போன்றவர்களைப்பற்றி நபியவர்கள் 1400 வருடங்களுக்கு சொல்லிச்சென்று விட்டார்கள் அந்த வார்த்தை பிழையாகுமா?

Jaahil angrathuk ippo ipdium meaning undo m.yaseer..? Kooottaaana mulla?

சரி, முல்லா என்பதும் மஞ்சளித்துப்போனது என்பதும் தவறு ஒத்துப்போகிறோம். குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள ஏனைய விடயங்களில் தங்களின் கருத்தை அறிய ஆசைப்படுகிறோம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிற்போக்குவாதம் இல்லையா? இருந்தால் அதற்கு காரணம் என்ன? அதனைச் சீர்செய்ய எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் என்ன? குறந்தது பொது வெளியில் குறிப்பிடுவதற்குக் கூட இந்த நாட்டு முல்லாக்கள் தயங்கவது ஏன்? உலக முஸ்லிம்கள், முஸ்லிம் நாடுகள் உலகோட்டத்துடன் இணைந்து செல்லத் தயார் நிலைக்கு வந்துள்ள போதும் இலங்கை முல்லாக்களில் பலர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ஏன்? எனக்குக் கற்பித்த இஸ்லாமிய கற்கைநெறி பேராசிரியர் ஒருவர் மிகச் சிறந்த முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருந்தார் ஆனால் ஒருபோதும் பொதுவெளியில் தம் கருத்துகைகளை வைத்தது கிடையாது. உலக இஸ்லாமிய நாட்காட்டி வேண்டுமென்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். முற்போக்கான விடயங்களைப் பேசும் போது காபிர் பட்டம் சூட்டிவிடுவார்கள் அல்லது மேற்கத்திய சிந்தனை என்பார்கள் எனப்பயந்திருக்கலாம். இக்கட்டுரையாளர் அவர் சார்ந்த சமூகத்தில் பிற்போக்குவாதமான அல்லது சக மனித இனத்துடன் இயைந்து போவதற்கு தடையாக உள்ள ஏதாவது கலாசார இடர்பாடுகள் இருக்கிறதா? இருந்தால் அதனைக் குறிப்பிட்டு காரணம் என்ன? அவற்றை நிவர்த்தி செய்ய இலங்கை முல்லாக்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக கட்டுரை ஒன்றை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Post a comment