Header Ads



திருமணப் பதிவு கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளது - அலி சப்ரியின் முன்மொழிவுக்கு அமைச்சரவையும் அனுமதி


1907ஆம் ஆண்டு திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நீதியமைச்சர் அல் ஷப்ரி முன்மொழிந்த திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி இந்த விவகாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவால் தொடர்புடைய சட்டம் திருத்தப்படவுள்ளது.

நவன காலத்துக்கு ஏற்பவும் ஏனைய நாடுகளின் சட்ட நிலைமைகளை ஆராய்ந்தும் திருமணங்களை இரத்து செய்தல், விவாகரத்து செய்தல், பிரித்தல், சொத்துக்களைப் பிரித்தல் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பில் வைத்திருத்தல் என்பன குறித்து சட்டத்திருத்தத்தில் இக்குழு பரிந்துரைகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

  1. ஏற்கனவே தனியார் சட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் முஸ்லிம் நாடுகளின் அனுபவங்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். அவசர கலப்புத் திருமணங்கள் சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விழைவிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. இருதரப்பு சம்மதத்தையும் பெறாத கலப்புத்திருமணங்கள் இன ஐக்கியம் கருதி பொதுச் சட்டங்களின்கீழ் இடம்பெற வேண்டும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Is this going to be the First Instalment of 'One country, one law' mantra?

    ReplyDelete

Powered by Blogger.