இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம் நவாஸின் தலைமையிலான குறித்த விசாரணை குழு இம்மாதம 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3 கருத்துரைகள்:
ஏற்கனவே ஒரு குழு தமது அறிக்கையை கொடுத்தாங்களே , அதனை அரசாங்கம் கருத்தில் கொண்டதா ? எதாவது முன்னேற்றம் இருந்ததா? எல்லாம் சும்மா படம்
to time pass? like experts committee
Cremation issue should not be cremated
Post a comment