Header Ads



தகராறின் பின் தகனம் செய்யப்பட்ட உடல், 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


குருணாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அடக்கம் செய்ய உறவினர்கள் தயாராகியுள்ளனர்.

இதன் போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் சடலம் மீளவும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மல்சிரிபுர, நீரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவராகும். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளளார். PCR பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அறிக்கை கிடைத்த பின்னரே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் சடலத்தை தகனம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சடலத்தை பொறுப்பெடுக்க சென்ற சுகாதார அதிகாரிகளுக்கும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தகராறின் பின்னர் சடலம் தகனம் செய்யப்பட்டதுடன் 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. How come they gave the body to family if they have done PCR ?
    They would have done it purposely to spread the virous among the family members. Then by morning they claim the body for burning after allowing enough time for spread among family.

    IF health authority is correct, they should have not released the body until PCR results is know.

    May be a new technique to put the society in trouble.

    ReplyDelete

Powered by Blogger.