Header Ads



தலதா மாளிகைக்கு உக்ரைன் நாட்டு, சுற்றுலாப் பயணிகள் சென்ற போது...!


- சேஹ்ன் செனவிரத்ன -

165 பேரைக் கொண்ட உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகள், கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் செல்லமுற்பட்ட வேளை, அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களை, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர்  உதயங்க வீரதுங்க, நேற்று (11) அழைத்துச் சென்றார்.

வாவி பாதை ஊடாக தலதா மாளிகைக்குள் நுழைய உக்ரைன் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உள்ளூர் யாத்திரிகர்களுக்கு  வழமையான வழி திறந்துவிடப்பட்டிருந்தது. 

இதன்போது அங்கு வந்த தம்மாலங்கார தேரர், உக்ரைன் பிரஜைகளுக்கு எதிர்ப்பை தெரிவித்ததுடன், கொரோனா வைரஸ் தொற்றால் உக்ரைன் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்துள்ளார்.

'மகாசங்கத்தினரையும் மக்களையும் ஏமாற்றி முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்றாலும் அதனை முன்னெடுப்பதற்கு இது சரியான தருணமல்ல' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஆட்சியைக் கொண்டு வந்தவர்கள் எதிர்க்கின்றனர். அரசாங்கத்தை ஒருவேலையும் செய்ய விடமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.