இலங்கையில் கொவிட் 19 காரணமாக மரணிப்பவர்களில் ஜனாஸாக்களை இலங்கை அரசாங்கம் பலவந்தமாக எரிப்பதற்கு எதிராக கொழும்பில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து சற்று நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டது.
சுகாதார வழிமுறைகளை கடை பிடித்து நடத்தும் ஆர்ப்பாட்டம் என்பதாலும் ஜனநாயக வழியில் போராடும் உரிமை எமக்கு இருப்பதாலும் எமது போராட்டம் தொடரும் என்றும்
நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்தால் சட்டத்தை மதித்து போராட்டத்தை நிறுத்துவோம் அதுவரை எமது போராட்டத்தை கைவிடமாட்டோம் என்ற அறிவித்த நிலையில் கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்த காரணத்தால் சட்டத்தை மதித்து ஆர்ப்பாட்டத்தை இடை நிறுத்தம் செய்து கொண்டோம்.
ஜனநாயக வழியில் எமது ஆர்ப்பாட்டம் ஒவ்வொறு பகுதியிலும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
SLTJ
4 கருத்துரைகள்:
These are all set up..
Their agenda is something else
Apoooo இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்
காரியம் கைக்கூடி வரும்பொழுது அதை குழப்ப களமிறக்கும் ஒரு தீவிரவாத கூட்டம் இந்த ctj
உலகமகா நடிப்புடா இது
Post a comment