Header Ads



ஜனாதிபதி செயலகம் முன் ஜனாசா எரிப்புக்கு எதிராக, இன்று பிக்குகள் போராடியது அரசாங்கத்தின் திட்டமாகும் - முஜிபுர் ரஹ்மான் Mp


பௌத்த பிக்குகளினால் இன்றைய தினம் -28- ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசாங்கத்தின் திட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யக் கூடாது எனக் கோரி இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பௌத்த பிக்குகளும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தவர்கள் என முஜிபுர் ரஹ்மான் இன்று கொழும்பில் தெரிவித்துள்ளார்.

உலகில் சுமார் 200 நாடுகள் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் பலர் கொவிட்டினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதில் பிரச்சினைகள் ஏற்படாது என அறிவித்துள்ள நிலையில் அரசாங்கம் ஏதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இனவாதத்தை தூண்டி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இனவாதத்தைக் கொண்டே தனது இயலாமையை மூடி மறைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் வீதியில் இறங்கி போராடியவர்கள் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் வீதியில் இறங்கியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. சின்ன வயதில் ஒழித்து பிடித்து விழையாடியதுபோல் உள்ளது இலங்கையில் இப்படி ஒரு கேவலமான அரசியல்.

    ReplyDelete
  2. நிச்சயமாக இதன் பின்னணியில் விமல் வீரவன்ச மற்றும் உதயகம்பன்பில உள்ளனர்

    ReplyDelete
  3. check the title and content

    ReplyDelete

Powered by Blogger.