-TW-
பேருவளையில் குடும்ப உறுப்பினர்கள் நால்வர் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
அந்த பகுதியை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரகசியமாக புதைக்கப்பட்டமை தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த 11ஆம் திகதி பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
இதன் போது இந்த நபர்களின் குடும்பத்தினர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேறு ஒரு நபரால் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய சுகாதார பரிசோதகர்கள் குடும்பத்தில் 15 பேரிடம் மேற்கொண்ட PCR பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன் பின்னர் வீட்டில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த வாரத்தில் அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இரவில் குடும்பத்தினர் அவரை புதைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 கருத்துரைகள்:
அரசாங்கத்திற்கு நெருப்புக்கொள்ளியால் தலையைச் சொறிந்த நிலைதான். சமூகநம்பிக்கைகளுடன் ஒத்திசைந்து போகாவிட்டால் வீட்டுக்கு வீடு படையினரை வைக்க வேண்டும், சம்பவத்திற்கு சம்பவம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவர்களை அகற்ற முடியாது குளிரூட்டிகளில் வைத்துப் பாதுகாக்க வேண்டும், வீடுகளில் விளக்கேற்றுகிறார்களா எனப்பார்வையிட புலனாய்வுத்துறையினரை நியமிக்க வேண்டும். எனவே சமூகங்களின் ஒத்துழைப்பின்றிப் போகும்போது நாட்டின் விருத்தியில் பயன்படுத்த வேண்டிய வளங்கள் வீண் விரயமாகிப் போவது புரியாமல் வன்போக்காளர்கள் வன்மத்துடன் செயல்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மென்போக்காளர்களின் கையோங்குமாயின் இந்நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என நம்பிக்கை கொள்ளலாம். கடும்போக்கான துறவிகள் கட்சியை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இலங்கை மக்கள் அவ்வளவு பிற்போக்கு வாதத்தில் இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
Post a comment