December 28, 2020

ஜனாஸா எரிப்புக்கெதிரான போராட்டங்களை முதலில் தடைசெய்க, பாரம்பரிய முஸ்லிம்கள் அகப்படாதீர்கள் - நாலக தேரர்


(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. உடல்கள் தகனம் செய்வதற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என தேசப்பற்று தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.   

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (28) தேரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்யும் தீர்மானம் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக ஒரு தரப்பினர் செயற்படும்போது ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கை எவ்வகையில் செயற்படுத்தப்படும் என்பதற்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசியலாக்க வேண்டாம். அடிப்படைவாதிகளின் குறுகிய நோக்கத்துக்கு பாரம்பரிய முஸ்லிம்கள் அகப்பட வேண்டாம். உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முதலில் தடை செய்ய வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். பௌத்த மக்கள் பொறுமையுடன் உள்ளார்கள். ஆகவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

10 கருத்துரைகள்:

பாரம்பரிய முஸ்லிம் என்று இவர்கள் கூறுவோர் கவனத்திற்கு, இந்த மூளையில்லாத சிங்கள தீவிரவாதிகள் எதையெல்லாம் அடிப்படைவாதம் என்கிறார்கள் பாருங்கள்.

பாரம்பரிய முஸ்லீம்கள் என்றாள் அது அபு ஜஹீல்,அபு தாலிப், அப்துள் முத்தலிப்,போன்றவர்கள் தான்.அவர்கள் அல்லாஹ்வை அப்படியே முழுமையாக நம்பினார்கள் ஆனால் இறுதி நபி ஸல்லல்லாஹ் அலைஹிவ ஸல்லம் அவர்களை இருதி நபி என்றும். அல்லாஹ்வின் வார்த்தையானா அல் குர்ஆனையும் ஏர்க்க மறுத்த கூட்டமே அந்த பாரம்பரிய முஸ்ஸீம். ஆனால் அந்த கூட்டம் இப்பொழுதும் திரிகின்றது.

அதென்னடா பாரம்பரிய முஸ்லிம். கலிமா சொன்ன எல்லாரும் ஒரே முஸ்லிம், எல்லாருடைய அடக்கமும் ஒரே விதம் தான். இதை அரசியாலாக்கி அவசரமா வர்த்தமானி செய்தது யார் ? உனக்கு முன்னால் இருக்கும் 4 ஒலி வாங்கி இலச்சினை மட்டும் போதும், உனக்கு பின்னால நிக்கிறது யார் என்று

பௌத்த மத குருகுகளுக்கு என் இந்த வேண்டாத அரசியல் வேலை! நாட்டில் கொலை, சிறுவர் துஷ்ப்பிரயோகம்,(சில தேரர்கள் கூட) விபச்சாரம் என்று நாளுக்கு நாள் பெருகி செல்கிறது,நாட்டின் ரூபாய் மதிப்பு அதல பாதாளத்தில் செல்கிறது இவை அனைத்தயும் அரசாங்கத்தின் கவனத்தில் கொண்டு வர வேண்டிய இவர்கள் பணம் ,பதவி,உல்லாச வாழ்கை,ஆடம்பர வீடு,வாகனம் போன்றவற்றுக்கு ஆசை பட்டு வாய் மூடி இருக்கிறார்கள் இப்படி நடுநிலையான,நல்ல பண்புள்ள படித்த சிங்கள மக்கள் கதைப்பதை கேட்டேன் அதிலும் சிலர் சொல்ல கேட்டேன் கொரோனவை வைத்து வியாபாரம் செய்யும் ஒரே நாடு இதுதான் என்று உள்ளத்தின் ஆட்சியாளன் அல்லாஹ் ஒருவனே

காலியில் நீதிமன்ற உத்தரவை மீறி எரித்தது எந்த வகையான ஒரே நாடு ஒரு சட்டத்தில் அடங்கும்? காலி இலங்கை க்குள் இல்லையோ.

hahaha intha satti thalai ellam well planned working on agenda dears...so just forget them... they say no rights for people, just listen what they say and go like buffalos, this is what they need... Allahvin paarvai miha miha sameepamaaha ullathu...

இவர் கூறும் தகனத்திற்குச் சார்பான பாரம்பரிய முஸ்லிம்கள் ஓரிருவரைக் கொண்டுவந்து காட்டுமாறு இவருக்கு சவால் விடுவதற்கு வழியில்லையா? இருந்த கிணற்றைக் காணவில்லை என்ற கதையாய் முடியும். அரசாங்கத்திற்குள் சில சாதகமான விடயங்கள் பரிசீலிக்கப்படும் போது வன்போக்கான அரசியல்வாதிகள் காவி உடை தரித்தோரை உசுப்பி விடுகின்றனர்.

மண்டையில் முடிதான் இல்லை .களியுமா இல்லை?

உன்னுடைய சாவு நாயை விட கேவலமாக அமையட்டும் இன்ஷா அல்லாஹ்....அது உனக்கு பின்னால் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் யா அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் மன்னித்து பாதுகாத்து இந்த கயவர்களை எங்கள் கண் முன்னால் கேவலப்படுத்தி அழித்து விடுவாயாக

கேவலம் மத குருக்களை கொண்டு மக்களை திசை திருப்பும் கேவலம் கெட்ட கூட்டங்களை அரசு நிறுத்துமாக இருந்தால் நிச்சயம் அரசு நல்ல நிலையில் செல்லும். மத உரிமை வேறு சட்டம் வேறு முதலில் இதனை தெளிவு படுத்த வேண்டும்.இந்த விடயத்தில் காவி உடை அணிந்து நாட்டை குழப்பும் இவ்வாறான அறிவிலிகள் உள்ளவரை சிறுபான்மை மக்களுக்கு துன்பம் தொடரும்.
இந்த மாபியாட்களை நம்புவதால் நாடு வல்லரசாக மாறும் துளி எண்ணம் கூட வந்து சேராது. இவர்கள் சீன அரசை நம்பி எமக்கு குடுக்கும் கஷ்டம் பாரிய விளைவை எதிர் கொள்ள நேரிடும்.

Post a comment