Header Ads



நியூஸிலாந்து பாராளுமன்றில் முதல், உரையை ஆற்றிய இலங்கைப் பெண்


நியூஸிலாந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் இலங்கையைச் சேர்ந்த பெண் வனுஷி வால்டர்ஸ் நேற்று புதன்கிழமை -02-  பாராளுமன்றில் தனது முதல் உரையினை நிகழ்த்தியுள்ளார்.

தனது உரையில் அவர் சிங்கள மற்றும் தமிழில் சுருக்கமான அறிக்கைகளை வெளியிட்டதுடன், மனித உரிமைகள் அனைவருக்கும் சொந்தமானது என்பதையும் நினைனவுபடுத்தினார்.

கொழும்பின் முதல் மேயராக இருந்த சரவணமுத்துவின் பேத்திதான் வனுஷி வால்டர்ஸ். 

நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றது.

இத்தேர்தலில் வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வானுஷி வால்டர்ஸ்.

நியூசிலாந்தின் வடமேற்கு ஆக்லாந்தில் ஹாமில்டன் கிரிக்கெட் வீரர் ஜேக் பெசன்ட்டை எதிர்த்து போட்டியிட்டார் வானுஷி. பெசன்ட் 12,272 வாக்குகளையும் வானுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளையும் பெற்றார். இலங்கையில் இருந்து பெற்றோருடன் 5 வயதில் நியூசிலாந்தில் குடியேறியவர் வனுஷி வால்டர்ஸ்.

இலங்கையில் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்டவர் வனுஷி. இவரது தந்தை வழி பாட்டி லூசியா சரவணமுத்து, 1931-ல் இலங்கை அரசு பேரவையின் வடக்கு தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

தாத்தா சரவணமுத்து, கொழும்பு முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயரில்தான் கொழும்பில் உள்ள விளையாட்டு அரங்கம் சரவணமுத்து விளையாட்டு மைதானமாக அழைக்கப்படுகிறது. 

வனுஷியின் தந்தை ஜனா ராஜநாயகம், தாயார் பவித்ரா. வால்ட்டர்ஸ் என்பவரை வனுஷி திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.