Header Ads



இஸ்லாமியர்களின் சடலங்களை அவர்கள் வாழும் பகுதிகளில், மக்கள் செறிவற்ற பகுதிகளில் அடக்கம் செய்யவேண்டும்


கொரோனாவால் மரணித்த இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அடக்கம் செய்யும் நோக்கத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவத்துள்ளார்.

கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தலைமன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியக்கிடைத்துள்ளதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்றினால் இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் வாத பிரதிவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரவர் மத அனுஸ்டானங்களை மதித்து இறுதி சடங்குகள் இடம்பெற வேண்டும் என்பதில் எமக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

எனினும் கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்து வாழும் தலைமன்னாரில் அடக்கம் செய்யும் தீர்மானத்தினை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான தீர்மானத்தினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான ஒரு தீர்மானத்தினை இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே எமது விருப்பமாகவும் உள்ளது.

கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் அவரவர் மத அனுஸ்டானங்களுடன் அடக்கம் செய்யவேண்டும் என்பதே எமது அவா என்பதுடன் இஸ்லாமியர்களின் சடலங்களை அவர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் செறிவற்ற பகுதிகளில் அடக்கம் செய்யவேண்டும் என்பதனையும் தெரிவித்துள்கொள்கின்றேன் என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

6 comments:

  1. தூர இடங்களில் கொரனாவினால் இறப்பவர்கள் உடல்களை மன்னாருக்குக் கொண்டு வந்து அடக்கும் போது அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அச்சம் கொள்வர் என்று சொல்லியிருக்கலாம் மாறாக இனங்களின் பெயரைக்குறிப்பிட்டுச் சொல்லுவது அரசியலாகுமோ? இருந்த போதும் எரிந்த வீட்டில் பிடிங்கியது இலாபம் என்ற வகையில் அடக்கம் செய்ய விரும்புவர்கள் அடக்கம் செய்ய விட வேண்டும் என்ற கூற்று சிறப்பானது.

    ReplyDelete
  2. வடக்கு க்கு வெளியே கோரோனவில் இறந்த முஸ்லிம் உடல்களை அடக்கம் செய்தால், இனக்கலவரம் வெடிக்கும் பள்ளிவாசல்கள் உடையும், இது தான் தற்போதய நிலவரம்

    ReplyDelete
  3. முஸ்லிம்களை நிம்மதியாக வாழவும் விடாமல் மரணித்தால் அவர்களை அடக்கம் செய்யவும் விடாமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.
    நாட்டை ஒருகூட்டத்தார் ஆட்சி செய்ய இன்னொரு கூட்டத்தார் சட்டத்தை அமுல் படுகிறார்கள்

    ReplyDelete
  4. செல்வம் அடைக்கலநாதன் (செஅ) ஐயா அவரகள் ஒரு மிதவாதி என்றும் சகல இனங்களுடனும் ஒத்துப் போகக்கூடியவர் என்றும் இனத்துவேசம் மற்றும் பாகுபாடு இல்லாத ஒருவர் என்றுதான் இதுவரை முஸ்லிம்கள் எண்ணியிருந்தனர். நேற்றைய மற்றும் இன்றைய பதிவுகள் வாசகர்களின் கண்களுக்கு பெரிதும் வித்தியாசமாகத் தோன்றுவது மிகவும் அச்சத்தை ஏறபடுத்தக்கூடியதாக இருக்கின்றது. கொரணாவால் இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்வதா அல்லது அடக்குவதா என்ற வினாவுக்கு விடையைக் கேட்டு இப்பதிவினை இங்கு இடவில்லை. இத்தகைய முஸ்லிம்களது பிரேதங்களை எரிப்பதற்கு நீங்களும் உடந்தையாக இருக்கின்றீர்களா என்பதுதான் கேள்வி. மேற்படி விடயமாக செஅ அவரகள் இதுவரை எங்கும் வாயைத் திறக்கவில்லை. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO); இது சம்பந்தமாக 194 உலக நாடுகளின் செயற்பாடுகள்; மற்றும் உலக விஞ்ஞானிகளின் அபிப்பிராயம் என்பனவற்றை அரசுக்கு எடுத்துக்கூறி தனது சகோதர இனம் சார்பாக இதுசம்பந்தமான தனது எதிர்ப்பையும் செஅ அவரகள் பதிவு செய்திருக்கலாம் அல்லவா. மேற்கூறப்பட்ட WHO வும் ஏனைய நாடுகளில் Covid19 பிரேதங்களை அகற்றுவது சம்பந்தமாக நடைபெறக்கூடிய செயற்பாடுகளும் செஅ வுக்கு சரியாகப்படுமானால் இலங்கையில் அத்தகைய இறந்தவரகளின் பிரேதங்களை எங்கு அடக்கினாற்றான் என்ன என்ற போக்கில் இருந்திருக்க வேண்டும் அல்லவா. இலங்கையின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர் அத்தகைய இடங்களுல் ஒன்றுதான் மன்னார் மாவட்டமும். அங்கு அவரகளை அடக்கினால் அசெ வுக்கு என்ன வந்தது. விளக்கம் தருவார்களா. தவிர கலமுனைப் பிரதேசம் மட்டக்களப்பு மற்றும் திருமலை போன்ற பிரதேசஙகளை அரசு குறிப்பிட்டிருந்தாலும்கூட அங்கு வாழக்கூடிய தமிழ் மக்களைக் காரணம் காட்டி அங்கும்கூட அடக்கமுடியாது என்ற கோஷத்தை அவரகள் அரசுக்கு வலியுறுத்துவார்கள்போல்த்தான் இருக்கின்றது.

    ReplyDelete
  5. தலை மன்னாரிலோ அல்லது மன்னாரிலோ அல்லது பா.உ.வின் கருத்துப்படி முஸ்லிம்கள் வாழும் பகுதியில் அடக்கம் செய்வது சுமுகமானதுதான். ஏனெனில் முஸ்லிம்கள் எப்போதும் இறைநம்பிக்கையில் உறுதியானவர்கள். மரணத்திற்குப் பயப்படாதவர்கள்... முஸ்லிமல்லாதவர்களது சடலங்களாயினும் முரண்படமாட்டார்கள்....

    ReplyDelete
  6. Batticaloa village kundu vaiththu thamizharkalaik konta Muslim theeviravaathiyai kalviyankaadu hindu mayaanaththil puthaithathaip Poland puthaippaanukal

    ReplyDelete

Powered by Blogger.