இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை அழித்தொழிப்பதில் அரசாங்கம் தோல்வியடைவதற்கு தான் விரும்பவில்லை என கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.
“ஆகையால், சகலரும் இணைந்து தொற்றிலிருந்து மீண்டெழும்ப முயற்சிக்க வேண்டும். அரசாங்கத்தை மட்டுமே விமர்சனத்துக்கு உட்படுத்துவது தவறானது” என்றார்.
“கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், தற்போதைக்கு முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சரியான முறையில் முடங்கினால் மட்டுமே டிசெம்பர் மாத முதல் பகுதியில், சகல பிரதேசங்களையும் திறக்கமுடியும்” என்றார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் அல்லது முடக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் சென்றுவருகின்றனர். அவ்வாறானவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவேண்டும் என்றார்.
இதுவரையிலும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4,836 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன், மரணமடைந்தவர்களில் 28 பேர் கொழும்பு மாவட்டத்துக்குள் உள்ளனர் எனத் தெரிவித்த அவர், மக்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது என்றார்.
0 கருத்துரைகள்:
Post a comment