Header Ads



மாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..? Ravaya


கட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ்

மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் 02.10.2020 ஆம் திகதி வெளியாகிய ஆக்கம் ஒன்று சுருக்கமான மொழிபெயர்ப்பு.

(முக்கிய விடயம் என கருதப்படும் விடயங்களின் கருத்தை மாத்திரமே தமிழ்படுத்தியுள்ளேன் என்பதனை கவனத்தில் கொள்ளவும்)

இந்தியாவில் மாடறுப்புக்கு நாடுதளுவிய தடை இல்லை. மேலும் இந்தியாவில் மத்திய அரசால் மாடறுப்புக்கான தடை விதிக்கப்படவில்லை. மாநிலங்களுக்கு ஏற்றவாறு இது தொடர்பில் முடிவெடுக்கும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 20 மாநிலங்கள் மாடறுப்புக்கு நிபந்தனைகளை விதித்துள்ளது (முழுமையான தடையில்லை).

கேரளா, கிழக்கு பெங்கால் உட்பட 6 அல்லது 7 மாநிலங்கள் மாடறுப்புக்கு எந்தவித தடையோ நிபந்தனையோ விதிக்கவில்லை. பல மாநிலங்கள் பசுக்களை, வண்டியிழுக்கும் மாடுகளை அறுப்பதனை தடை செய்துள்ளது. ஆனாலும் இந்த மாநிலங்களில் வயது முதிர்ந்த பயன் குறைந்த மாடுகளை அறுப்பதற்கான அனுமதியினை பெற்று மாடுகளை அறுக்க முடியும்.

2020 மார்ச் முடிவில் குறித்த நிதியாண்டின் இந்தியா 1,152,547 மெட்ரிக்தொன் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதற்கு முந்திய ஆண்டில் 1,236,638 மெட்ரிக்தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிடமிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்த பிரதான 5 நாடுகள்

வியட்நாம் (1,058.68 அமெரிக்க டாலர்

மலேசியா 375.92 அமெரிக்க டாலர்

எகிப்து 334.06 அமெரிக்க டாலர்

இந்துநேசியா 230.39 அமெரிக்க டாலர்

ஈராக் 169.67 அமெரிக்க டாலர்

இலங்கையில் மாடறுப்பு சட்டம் அமுல்படுத்தப்படவிருப்பது இந்தியாவைப் போன்று நிபந்தனைகள் சலுகைகளுடன் அல்ல. வயது முதிர்ந்த பயனற்ற மாடுகளைக் கூட அறுக்க அனுமதியற்றவாறே இலங்கையில் மாடறுப்பு சட்டம் அமுலுக்கு வரவிருக்கிறது. அதாவது முதுமையடைந்த பயன் குறைந்த மாடுகளுக்கு முதியோர் இல்லத்தை போன்று மாடுகளுக்கும் அமைக்கப்பட்டு அம்மாடுகள் பராமரிக்கப்படும். அதற்கான செலவை யார் பொறுப்பெடுப்பார் அரசா? பொதுமக்களா? என்பது ஒரு பெரிய கேள்வி.

இலங்கையை பொறுத்தவரை 2017 கணக்கெடுப்பபின் படி

மொத்த மாடுகளின் எண்ணிக்கை 1.39 மில்லியன்

அவற்றில் பால் தரும் மாடுகள் 398,608

பயன் குறைந்த முதுமை அடைந்த மாடுகள் 165,160

மாடறுப்பு தடைசட்டத்தின் பின்னர் பயன்குறைந்த மாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 2 வீதத்தால் அதிகரிக்கும்.

இந்தியாவைப் போன்று இலங்கை கிராமங்களில் மாடுவளர்ப்பவர்கள் ஒரு சிறந்த ஒழுங்கில் திட்டமிட்டு மாடுவளர்ப்பில் ஈடுபடுவாகள் அல்ல. அவ்வாறு வளர்ப்பவர்களுக்கு அரசால் கூட எந்த உதவியோ ஒழுங்கோ செய்துகொடுக்கப்படுவதில்லை.

மாடறுப்பு தடைசட்டம் நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரானதாக விதிக்கப்படாவிட்டாலும். மாடறுப்பு எதிர்ப்பு பிரச்சாரம் 3 தசாப்தங்களுக்கு முன்னரே முஸ்லிம்களுக்கு எதிராக வியாபாரிகளால் ஆரம்பிக்கப்பட்டவொன்று. இதற்கு பிரதான காரணம் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடும் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால்.

மாட்டு வியாபாரம், இறைச்சி வியாபாரம் முஸ்லிம்களின் கைகளில் இருந்தாலும் அவற்றை வளர்த்து பராமரித்தெடுக்கும் தொழிலை செய்பவர்கள் சிங்கள பௌத்த கிராமவாசிகளே. வடக்கில் வன்னி போன்ற பிரதேசங்களில் மாடுவளர்ப்பில் அதிகம் ஈடுபடுபவர்கள் இந்துக்களே. முஸ்லிம்கள் பெரும்பாலும் ஆடு வளர்ப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

மாடு வளர்ப்பில் ஈடுபடுவர்கள் குறித்த மாட்டின் பயன் தரும் காலம் முடிந்ததும் அதனை வைத்தக் கொண்டு வளர்க்க மிகப் பெருமளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.  அதே போன்று இத்தனை காலமும் தனது வாழ்வாதாரத்துக்கு உதவிய அந்த மாட்டை பராமரிக்காமல் பட்டினியில் போட்டு  வதை செய்யவும் விவசாயி விரும்பமாட்டான். கிராம மாடு வளர்ப்பவர்களைப் பொறுத்த வரை அடுத்த மாடுகளிலிருந்து வரும் வருமானத்தில் பெரும் பகுதியை இந்த முதுமையடைந்த பயன் குறைந்த மாட்டைப் பராமரிக்கவே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

மாடு வளர்க்கும் சிங்கள பௌத்த கிராமவாசிகள் மாடுகளை வளர்ப்பது பாலுக்காக மட்டுமல்ல. அவசர பணத்தேவைகளின் போது உடனடியாக பணமாக மாற்றிக்கொள்ளக் கூடியது தான் மாடுகள். மாடறுப்பு தடைசட்டம் அமுலுக்கு வந்தால் நீண்ட காலம் சிரமப்பட்டு வளர்த்த மாட்டை வெறுமனே விட்டு வைக்க வேண்டும் அல்லது அந்த மாட்டின் மூலம் ஈட்டிய வருமானத்தை அந்த மாட்டைப் பராமரிக்கவே செலவழிக்க வேண்டிய நிலையே உருவாகும். கிராமத்தில் மாடு வளர்ப்பவர்களுக்கு இந்த சட்டம் இரண்டுகெட்டான் நிலையைத்தான் உருவாக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

 திருமணவீடுகள் போன்றவற்றுக்கு பரவலாக மாடுகள் வாங்குவதுண்டு. ஒரு மாட்டின் விலை பல சந்தர்ப்பங்களில் 1 லட்சத்தையும் தாண்டி விலை போகும். இந்த  இடத்தில் தான் சிஙகள பௌத்த கிராமியர்களுக்கு முஸ்லிம் வியாபாரியின் உதவி தேவைப்படுகின்றது.பெரும்பாலான முஸ்லிம் வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும் வேலையையே செய்கின்றனர்.

தியாக நடக்கப் போவது மாடறுப்பு சட்த்தால் கடுமையாக பாதிக்கப்படப் போவது கிராமத்து சிங்கள் பௌத்த மாடு வளர்க்கும் விவசாயிகள் தான் முஸ்லிம் வியாபாரிகள் அல்ல. வியாபாரிகள் ஒரு வியாபாரம் இல்லாவிட்டால் இன்னொரு வியாபாரத்துக்கு உடனடியாக மாறிவிடுவார்கள். ஆனால் மாடு வளர்ப்பதனையே தொழிலாக கொண்டவர்கள் பயனற்ற முதுமையடைந்த மாடுகளை வளர்த்துப் பராமரிக்க கிராம வியாபாரிகளுக்கு எந்த மாற்றீடும் இல்லை. முதிர்ந்த பயனற்ற மாடுகள் அதிகரித்துச் செல்லும் போது கிராம மட்டத்திலான குற்றங்களும் அதிகரித்துச் செல்லும். ஒழுங்குபடுத்தப்படாத மாடுவளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை கிராமத்தின் மாடு வளர்ப்பவனுக்கு இந்த சட்டம் இன்னுமொரு சுமையே அன்றி வேறில்லை. இதனால் கிராமங்களில் மாடு வளர்ப்பதனை வாழ்வாதாரமாக செய்து  வரும் மாடுவளர்ப்பவர்களுக்கு ஒரு பெரிய அடி தான். கிராமங்களில் வறுமை நிலை பெருக இன்னொரு பிரதான காரணமாக இந்த சட்டம் அமையும் என்பது உறுதி.

15 comments:

  1. மாடுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது தானே?
    பிரச்சனை முடிந்தது.

    ReplyDelete
  2. இலங்கை யில் மாடு வெட்டும் தடைக்காக ஏன் தேவையில்லாமல் இந்திய செய்திகளையும், சிங்கள விவசாயிகளையும் ஆராய்கிறார்கள் ?

    உங்களுக்கு மாடுதான் உண்ணவேண்டுமென்றால் அதை நேரக அரசுடன் பேசுவது, அது சரிவராவிட்டால் போராடி பெறுவது தானே.
    ஒன்றையும் நேரியாக, சம்பந்தபட்டவர்களும் அனுகாமல், இந்த சுத்து மாத்தும் பொய்களும் ஏன்?

    ReplyDelete
  3. மாட்டை கொள்ளக்கூடாது.ஆனால் மாட்டிறைச்சி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய போகிறார்கள்.

    இறைச்சி உண்பதை தடை செய்துவிட்டு மாடறுப்பதை தடை செய்வது தான் சாலப்பொருத்தம்.

    ReplyDelete
  4. அஜன் எனும் மாட்டையும் சேர்த்து இந்தியாவுக்கு அனுப்புவதும் சிறந்த தீர்வாக அமையும்.

    ReplyDelete
  5. Very good artical and this has to reach those who want to ban. Very soon local farmers protest when they loose income.

    ReplyDelete
  6. சிறிது மூளைக்கும் வேலை கெடு அஜன்.

    ReplyDelete
  7. இந்தத் தரமான கட்டுரையை எழுதிய நண்பருக்கு மிகுந்த நன்றி. மாடறுப்புத் தடையினால் முஸ்லிம்களுக்கு உணவு தேடுவதில் சற்றுக் கஷ்டம் என்றாலும் பொருளாதாரரீதியில் பௌத்த சகோதரர்களுக்கும் இந்து சகோதரர்களுக்கும் ஏற்படக்கூடிய அளவிற்கு நட்டம் ஏற்படாது. ஏனெனில் இங்கு முஸ்லிம்கள் மாடு உண்ணிகளே தவிர மாட்டு வியாபாரிகள் அல்லர். இங்கு முஸ்லிம்கள் மாடு வளர்ப்பில் பெருமளவில் ஈடுபடக்கூடியவரகள் அல்ல. இலங்கையின் மாடுகள் சம்பந்தமான பொருளாதார அமைப்பு முழு இனங்களும் தழுவிய முறைமையாக இருந்தாலும் இதனால் அதிக பாதிப்பு முஸ்லிம்களுக்கு அல்ல. மாட்டு வியாபாரத்தில் சகலரும் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்களில் 90% த்திற்கு மேல் மாடுகளை வாங்குபவரகளாகத்தான் இருக்கின்றனர். ஹஜ் காலத்தில் குர்பான் கொடுப்பதற்காக மாடுகளை மிகவும் பெருவாரியாக கொள்வனவு செய்யப்படக்கூடிய இடம் கிழக்குப் பெரும் பாகத்தில் பொலநறுவை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகல் பகுதிகள்தான். இங்குள்ள மாட்டு வியாபாரிகளில் மிக மிக பெருமபான்மையினர் சிங்கள பௌத்த சகோதரர்களே. குரபானுக்கு பொருத்தமான மாடு ஒன்று ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக ஏன் நாட்கள் நெருங்க நெருங்க இதனை காட்டிலும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யும் சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரண சிங்களப் பொது மக்களே தமது மாடுகளைக் மாட்டு வியாபாரிகளுக்கு நேரடியாகக் விற்காமல் தனிப்பட்ட முஸ்லிம்களுக்கு நேரடியாக விற்பதனையும் நகரங்களிலும் கிராமங்களிலும் காணலாம். ஹஜ் காலத்தில் மாடுகளை விற்பதற்காகவே மாடுகளை வளர்த்து அதிக விலைக்கு விற்பவரகளையும் நாம் காணலாம். மாடு அறுப்புக்குத் தடை வருமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு ஆடு இருக்கின்றது. ஆட்டையும் கொல்லக்கூடாது என்ற தடை வருமாக இருந்தால் அதுவும் மிக நல்லதுதான். குர்பான் கொடுக்க மிருகங்கள் கிடைக்காவிட்டால் எங்களது கண்ணியமிக்க உலமாக்கள் அதற்குரிய வழிகாட்டல்களை வழங்குவார்கள். மாடறுப்புத் தடையினால் முஸ்லிம்களுக்கு நிச்சயமாக எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. பிரதமரே இந்த பிரச்சினையை ஒரு இனத்திற்கு எதிராகக் கொண்டு வந்ததுதான் துக்கத்திற்குரியது. இறுதியாக பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எனறவாறு நிலைமை மாறாவிட்டால் சரி.

    ReplyDelete
  8. The above Ravaya article was written by a Non Muslim author.

    ReplyDelete
  9. நல்ல நல்ல செய்திகள் எதிர்காலத்தில்
    வரும் முஸ்லிம்கள் மாட்டு இறைச்சி
    இல்லாவிட்டால் செ த் து விட மாட்டார்கள்

    ReplyDelete
  10. வயதான எல்லா மாடுகளை யும் முறையாக பராமரிப்பதட்கு தேவயான விலங்கு முகாம்கள் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட வேண்டும். இந்த முகாம்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி போட்டி பரீட்சை மூலம் பட்டதாரிகளை கொண்டு வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். இதை ஒரு பத்தாண்டு திட்டமாக அறிவித்து COPE & COPA வை கொண்டு கண்காணிக்க வேண்டும்.

    இப்படி செய்யும் பட்சத்தில் 2030இல் இலங்கை வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது.

    ReplyDelete
  11. முஸ்லிம்களுக்கு உணவு தேடுவது ஒன்றும் இத்தடையால் கஷ்டமாகப் போவதில்லை, அத்துடன் முஸ்லிம்கள் மாடுண்ணிகள் என்பதெல்லாம் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் மாடுண்னும் மற்றவர்கள் முஸ்லிம்களைவிட எண்ணிக்கையில் அதிகம் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் சத்தமில்லாமல் இவர்களுக்குள் மறையப் பார்கிறார்கள்...

    ReplyDelete
  12. முஸ்லிம்களை பழிவாங்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் தொடர்பாக முஸ்லிம்கள் பேசாமல் இருப்பது சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். உங்களுடைய அபிப்ராயங்கள் மாறுபட்டதாக இருக்கலாம்.

    * இதனால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களை விட தமிழர்களும் சிங்களவர்களும் ஆவர்.

    * முக்கியமாக இங்கு முஸ்லிம் இறைச்சிக் கடை முதலாளிக்கு பாதிப்பு உள்ளது.

    * மேலும் பிரதேச சபைகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட உள்ளது.

    முஸ்லிம்களின் உணவுக்கு மாட்டை விட்டு விட்டு ஆடு,கோழி போன்ற உணவுகளை உட்கொள்ள எந்த விதமான தடைகளும் இல்லை என்பதை மற்ற இனத்தவர்கள் புரிந்து கொண்டால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

    மேலும் இங்கு மிக முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடயம்.

    * மாடு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    * எனவே முஸ்லிம்களுக்கு மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.

    இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால்!

    அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நிறைய விடயங்கள் திரைக்கு அப்பால் நடந்து கொண்டே இருக்கின்றன.

    இதை நோக்கும்போது அரசாங்கத்தினால் எவ்வாறான உத்தரவாதத்தையும் நூற்றுக்கு நூறு வீதம் கொடுக்க முடியாது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    முஸ்லிம் பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகளை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    தண்டனைகள்

    இவ்வாறு முஸ்லிம்
    பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தண்டனைகள் கிடைக்கலாம்,

    * ஆனால் மரண தண்டனை கொடுக்க மாட்டார்கள். (இந்தியாவில் Ajan அஜன் கொடுப்பதுபோல்.)

    யாருக்கு இலாபம்

    1. மாட்டு இறைச்சி இறக்குமதியாளர்கள்
    2. மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி பத்திரம் வழங்குபவர்கள்
    3. முஸ்லிம்கள்- சலுகை விலை, உள்நாட்டில் மாடுகளின் விலை குறைதல்
    4. ஆட்டு பண்ணையாளர்கள்
    5. கோழிப் பண்ணையாளர்கள்

    யாருக்கு நஷ்டம்

    1. மாட்டுப் பண்ணையாளர்கள்
    2. கிராமிய விவசாயிகள்
    3. மாட்டிறைச்சி கடை வியாபாரிகள்
    4. இறைச்சி தொழிலாளிகள்
    5. பிரதேச சபைகள்
    6. குர்பானி கொடுக்கும் முஸ்லிம்கள்
    7. முஸ்லிம்களுக்கு மாடுகளை விற்கும் தமிழர்கள்
    8. முஸ்லிம்களுக்கு மாடுகளையும் விற்கும் சிங்களவர்கள்

    உண்மை சம்பவம்

    நாங்கள் ஒரு பசுமாட்டை நீண்ட நாட்கள் வளர்த்து வந்தோம். அதில் பால் அருந்தினோம்.

    அதை இறைச்சிக் கடைக்கு கேட்டார்கள்...

    எங்களுக்கு அதை இறைச்சி கடைக்கு விற்பனை செய்ய விருப்பமில்லை.

    எனவே அதை குறைந்த விலைக்கு ஒரு தோட்டத்துக்கு விற்பனை செய்தோம்.

    ஒரு மாதத்துக்கு பின்னர் கேள்விப்பட்டோம். நாம் குறைந்த விலைக்கு விற்பனை செய்த அந்த
    பசு மாட்டை அதிக விலைக்கு இறைச்சி கடைக்கு விற்பனை செய்துள்ளார்.

    “இதுதான் திரைக்கு அப்பால் நடக்கும் உண்மை”

    சைவ உணவு உண்பவர்கள் தனது மாடுகளை பண்ணையாளர்களுக்கு அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது பொதுவான வழக்கம்.

    இறுதியில் அந்த மாடுகள் இறைச்சிக் கடைக்கு செல்கின்றன.

    “நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த கிழட்டு மாடுகளின் விற்பனை வருமானம் மாட்டு இறைச்சி மூலமே நம்மை அடைகின்றன”

    “யாருக்கு இந்த யதார்த்தமான உண்மையை புரிந்து கொள்ள முடியுமோ அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்”

    எனவே முஸ்லிம்களை பொறுத்தவரை இதில் பெரிதாக ஒரு நஷ்டமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  13. மாடறுப்பு விடயத்தை ஏன் முஸ்லிம்களின் பிரச்சினையாக சிந்திக்கிறீர்கள்? இந்தச்சட்டம் நிறைவேற்றப்படுவனால் முஸ்லிம்ளுக்கு 10%பாதிப்பு ஏற்பட்டால் 90% பாதிப்பு ஏனைய சகோதர இனங்களுக்கு ஏற்படும்.

    ReplyDelete

Powered by Blogger.