Header Ads



இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ய, சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது - அமெரிக்கா தெரிவிப்பு


சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ய முயற்சிகள் நடப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் அண்டை நாடான சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக, வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வருவதாக, அமெரிக்கா குற்றஞ் சாட்டி வருகிறது.


அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, கட்டாய கருத்தடை செய்யப்பட்டு வருவதாக, சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.


அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும், சீனா மறுத்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் நேற்று -17- கூறியதாவது, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் முஸ்லிம்களை இனப் படுகொலை செய்ய முயற்சிகள் நடப்பது போல் தோன்றுகிறது.


அது, இனப் படுகொலையாக இல்லாவிட்டாலும், அதனுடன் தொடர்புடைய ஏதோ ஒன்றை, சீன கம்யூனிஸ்ட் அரசு செய்து வருவதை, என்னால் உறுதியாக கூற முடியும்.


ஜூன் மாதம், அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளால், ஜின்ஜியாங்கில் இருந்து வந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்து, தலைமுடி சார்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை, மனிதர்களின் முடியால் செய்யப்பட்ட பொருட்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.அங்குள்ள உய்குர் முஸ்லிம் பெண்களுக்கு மொட்டை அடிக்கப்படுகிறது.


அந்த முடியை வைத்து, சீன நிறுவனங்கள், இது போன்ற பொருட்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.