October 16, 2020

ரிஷாதை கைது செய்ய வேண்டாம் - ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம்


- ரஸ்மின் -

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பாலாவியில் இன்று (16) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றது. 


புத்தளம் பாலாவி இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். 


இதன்போது 20ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தம், தேர்தல் காலங்களில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை என்பனவற்றுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 


ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் நபர்களுக்கிடையிலான தூரம், முகக் கவசம் உட்பட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


இதன்போது ´ரிஷாத் பதியுதீன் பயங்கரவாதி அல்ல. அவர் சிறுபான்மை மக்களின் தலைவர்´, ´சிறுபான்மை கட்சிகளை அழிக்காதே´, ´சஜீதை ஆதரித்தது குற்றமா?´, ´சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 20 ஆவது சீர்திருத்தம் எமக்கு வேண்டாம்´ உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 


பாராளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை இல்லாமல் ஆக்கி சர்வாதிகார போக்குடைய அரசாங்கத்தை கொண்டு வருவதற்கே 20ஆவது அரசியல் யாப்பு சீர் திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. 


நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும். பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்டவையும் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஒரு தனிமனிதனுடைய கரங்களில் அதிகாரங்களை சென்றடைவதற்கும், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் துணைபோக மாட்டோம். 


20ஆவது அரசியல் சீர்திருத்ததிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும் என்றார். 


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புத்தளம் தலைமையக பொலிஸாரும், போக்குவரத்து பொலிஸாரும், பொலிஸ், இராணுவ மற்றும் விமானப்படை இரகசியப் பிரிவினரும் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

3 கருத்துரைகள்:

இது என்ன நாடகம்?, ஆண்டவரை தொழ வந்த இடத்தில் பதாகைகளை பிடிப்பது சரியா?

திலிபனுக்காக தமிழர்கள் வெற்றிகரமாக “கர்த்தாள் “ செய்து காட்டியது போல, உங்கள் தவைவருக்காக கர்த்தாள் செய்யுது காட்டுங்கள் பாரப்போம்

தம்பி பள்ளிக்குள் தொழுகை முடிந்தது. வெளியே நடப்பது மடையர்களின் வேலை.றிசாத் ஒரு கட்சித் தலைவர். அவர் முஸ்லிம்களின் தலைவர் இல்லை. உங்ஙளை போல கர்த்தாள் செய்து மேலும் மடையர்களாக தேவையில்லை. உங்களுக்கு கவலை என்றால் நீங்கள் செய்யலாம்.

ஹர்த்தால் செய்த முட்டாள் தமிழன் இதுவரை எதை கிழித்துள்ளான்? இதுபோன ஈழமும் கர்த்தாலும் வயிறுவளர்க்கும் தமிழ் பயங்கரவாதிகளை தவிர எந்தவொரு அறிவார்ந்த சமூகத்திற்குள்லும் எடுபடாது

Post a comment