Header Ads



ஹக்கீமின் இல்லத்தில் நேற்றிரவு சந்திப்பு - 4 Mp க்கள் அரசுக்கு ஆதரவளித்ததையடுத்து அவசர உயர்பீடக் கூட்டம்


(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து, எதிராகவே வாக்களித்த நிலையில், அக்கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்த ஒரு சில தினங்களில் கட்சியின் உச்ச பீடம் அவசரமாக கூட்டப்படவிருப்பதாக செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.


"20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எதிராக வாக்களித்த நிலையில், கட்சியின் எம்.பி.க்கள் ஆதரித்த விவகாரம் தொடர்பிலான ஊடக வெளியீடு" எனும் தலைப்பில் அவர் இன்று சனிக்கிழமை (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;


நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவு  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் முன்னிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களின் அவசரக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இக்கூட்டத்திற்கு 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களான எச்.எம்.எம்.ஹரிஸ், பைசல் காஸிம், எம்.எஸ்.தொளபீக், நஸீர் அஹமட் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். 


இதன்போது இவர்கள் நால்வரும் தாம் ஆதரவாக வாக்களித்தமைக்கான விளக்கத்தை வழங்கியிருந்தனர். இவ்விளக்கத்தை கட்சியின் உச்ச பீடத்திற்கு வழங்குமாறு தலைவர் மற்றும் செயலாளரினால் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் உச்ச பீடக்கூட்டத்தை அவசரமாக கூட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. மக்கள் அடிமாடுகளாக இருக்கும் வரை பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்மக்கள்மீது ஏறி அமர்ந்து சவாரி செய்வதில் என்ன தடையைக் காணலாம்.

    ReplyDelete

Powered by Blogger.