Header Ads



20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மனசாட்சிக்கு அமைய தீர்மானிப்பேன் - விதுர


20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக தான் மனசாட்சிக்கு அமையே தீர்மானிக்க போவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் 18ஆவது திருத்தச் சட்டத்தை நோக்கி செல்வதாக இருந்தால், அது நடக்க வேண்டிய விடயமல்ல.

முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்கள் சிறந்தவை, சில கெடுதியானவை.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின், வாக்கெடுப்பு நடத்தும் போது தீர்மானம் ஒன்றை எடுப்பேன். குடும்பத்தினர் மற்றும் ஏனையோரின் தேவைக்கு அமைய நான் தீர்மானங்களை எடுக்க மாட்டேன்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய தீர்மானங்களை எடுப்பேன். நாட்டு மக்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கோரினார்களே அன்றி, ஓட்டுப் போடும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை அல்ல.

தொடர்ந்தும் இதற்கு இடமளிக்க முடியாது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக கூறியே நாங்கள் வாக்கு சேகரித்தோம் எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.