Header Ads



மாகாணசபை இல்லாமல் ஆக்கப்படும் என்பது பொய்யானது - தினேஸ் குணவர்த்தன


மாகாணசபை தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்டத்தில் எந்த விடயமும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாணசபை தொடர்பான மாற்றங்களும் புதிய அரசியலமைப்பில் கொண்டு வரப்படாது என்பதினால் இந்தியாவுடனான தங்கள் உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்பாடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் சமூக விதை வங்கிக்கிக்கு இன்று விஜயம் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக பலர் தவறான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

மாறுபட்ட சிந்தனையையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு அச்சம் கொள்ள வேண்டிய தேவை 20 ஆவது திருத்த சட்டத்தில் இல்லை. இலங்கைக்கு நன்மை பயக்கும் விடயங்களே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டம் மூலம் மாகாணசபையை இல்லாமல் செய்து விடுவார்கள் என்ற கருத்து பொய்யானது. அவ்வாறான எந்த சிந்தனையும் 20ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

இவ்வாறான கருத்து மகாவலியை மன்னாருக்கு கொண்டு வரப்போன்றதாக தான் இருக்கும். மாகாணசபைத் தேர்தலை நடந்த வேண்டி பொறுப்பு கடந்த அரசாங்கத்திற்கு இருந்த போதும் அதனை நடத்தவில்லை.

மாகாணசபை தொடர்பான மாற்றங்களும் புதிய அரசியலமைப்பில் கொண்டு வரப்படாது என்பதினால் இந்தியாவுடனான எங்கள் உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்பாடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. Ok good.

    அடுத்து, வட-கிழக்கை இணையுங்கள்.
    அதையும் இந்தியாவோ, அமேரிக்காவோ வந்து சொல்லும் வரை காத்திருக்கவேண்டியது இல்லை,

    வடகிழக்கு இணைப்பை யாராவது எதிரத்தால், பிடித்து சிறையில் போடுங்கள்

    ReplyDelete
  2. தினேஸ் அந்த அது இருக்கவேணும்.

    ReplyDelete

Powered by Blogger.