Header Ads



கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மக்கள் தீவிரமாக கருதவில்லை – இராணுவதளபதி


வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களில் ஒன்றை மாத்திரம்ட ஒரு நாளைக்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் பலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இதனை அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க அளவு நோயாளர்களுக்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறுவதனால் பாரிய விளைவுகள் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரும் போது தொடர்ந்தும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரஸ் ஆபத்தினை மக்கள் சரியாக உணரவில்லை என தெரிவித்துள்ள அவர் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக இல்லாமல் போகும் வரை பொதுமக்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.