Header Ads



இன, மத முரண்பாடுகள் ஏற்படுத்துகின்ற அரசியல் கட்சிகளை தடைசெய்க - பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சகல மதம், கலாச்சாரங்கள் அமைய வேண்டும்




இன மற்றும் மத ரீதியான பிரிந்துள்ள அனைத்து இலங்கையர்களை ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார். 


இதற்காக இளைஞர், யுவதிகள் முன்னின்று செயற்பட வேண்டியது அவசியம் என பேராயர் கனேமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறினார். 


´அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதால்தான் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் அதன் பின்னர் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனது. இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட அவிசுவாசத்தால் 30 வருட யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது´. 


நாட்டில் இன மற்றும் மத ரீதியான பிளவுகள் ஏற்பட அரசியல்வாதிகள் பொறுப்புகூற வேண்டியது அவசியம் எனவும் அரசியல்வாதிகள் இன மற்றும் மத ரீதியான கருத்துக்களை அரசியல் மேடைகளில் பிரதான பேசி பொருளாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 


எனவே, இன மற்றும் மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படும் வகையில் செயற்படும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 


அதேபோல் பாடசாலை மாணவர்களுக்கு இரு பிரதான மொழிகளும் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் பேராயர் கூறினார். 


பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு சகல மதம் மற்றும் கலாச்சாரங்கள் அமைய வேண்டும் எனவும் அதற்காக அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


எனவே, இன்றைய சூழலில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை இளைஞர், யுவதிகள் ஏற்க வேண்டியது கட்டாயம் எனவும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார். 

5 comments:

  1. The paragraph before the last ?
    is not wage ?

    We respect the people who, believe in other religion, but how come one should practice a religion but based on another religion?

    ReplyDelete
  2. are you ok, Ranjith, if you want to follow budish you have a freedom, but you don't tell others to follow, others have their true believe, they will follow, don't try to jump over the limit, sometime your speech may fuel fundamentalist budish to violent against others true believers, anyway believers will not change for money or politics pressure,

    ReplyDelete
  3. ​பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு சகல மதங்களும் கலாசாரங்களும் அமைய வேண்டும் என பௌத்த மதம் சாராத கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு மதப் போதகர் எவ்வாறு போதிக்க முடியும் அது அவருடைய நமபிக்கை்கு முரணானது. அவர் கிறிஸ்தவ போதகராகவோ அல்லது வேறு ஏதும் மதத்தலைவராகவோ இருககலாம் எல்லா மதங்களையும் கலாசாரங்களையும் ஒரு கலாசாரத்துக்கு உற்பட்டு இயங்கவேண்டும் என்ற கோரிக்ைகயை விடுவதற்கு அவருக்கு உரிமையில்லை என்பதை அவர் அல்லது அவர் போன்ற ஏனையவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  4. Not Practical. What are you upto?
    We have many different culture in Srilanka. Tell us why you want us to follow Buddhist culture?
    Even Buddhist following most of Hindu Culture. Buddhist is just a Philosophy not a religion.
    I'am a good Buddhist but my Religion is Islam.
    Mr. M. Ranjith.. also i follow Christianity/Jesus but I'm Muslim.
    We don't have right to force people to Follow others cultures...

    ReplyDelete
  5. ஆஆஆ... அப்புறம் சிண்ட்ராசு

    ReplyDelete

Powered by Blogger.