Header Ads



புதிய அரசியலமைப்பை உருவாக்கவே, ஜனாதிபதிக்கு மக்கள் பெரும்பான்மை வழங்கினர் பௌத்த மகா சங்க சபை


நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோத்தா பய ராஜபக்ஷவுக்கு மக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளதாகப் பௌத்த மகா சங்க சபை சுட்டிக்காட்டியது.

படிப்படியாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி செல்லும் பயணத் தைத் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுர அதமஸ்தானத்திற்கு சென்ற ஜனாதிபதி ஆசிர்வாதம் பெற்றார்.

அத்துடன் ஜனாதிபதி இன்று லங்காராமய, மிரிசவேதிய மற்றும் ஸ்ரீ சம்புத ஜயந்தி விகாரைகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மகா சங்க சபையினர் இந்த கருத்துக்களை முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Yeah. Without knowing anything about the Contents of the New Constitution to replace the existing Constitution, as no Details were revealed, the people gave the new President a blank cheque to do whatever he wanted in the New Constitution! Doesn't it mean the people voted Blindly? What does it say about the civic mindedness and political Maturity of those who voted for the new President and those who claim that the people did so?

    ReplyDelete

Powered by Blogger.