Header Ads



கொரோனாவால் மரணித்தவர்களின் இறுதி நிகழ்வை, மார்க்க முறைப்படி கண்ணியப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு மரணித்தவர்களின் இறுதி நிகழ்வை மார்க்க முறைப்படி கண்ணியப்படுத்தி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் அரசிடம் வேண்டுகோள் முன்வைத்தார்.

அவரது நாடாளுமன்றக் கன்னி உரை வியாழக்கிழமை மாலை 10.09.2020 இடம்பெற்றது.

அங்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து உரையாற்றிய அவர்

கடந்த பல மாதங்களாக கொரோனா தாக்கத்தினால்  வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கை இளைஞர் யுவதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து  தொழில் இழந்து பரிதவிக்கின்றனர்.

அவர்களை அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு வரவழைக்கும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

அத்தோடு அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கி அவர்களின் தொழில் இல்லாப் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள் மீளத் தொடரப்பட வேண்டும்.

வாழைச்சேனையில் குடிநீர் திட்டம் முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்து அந்தப் பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .

ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வந்த நவீன பொதுச்சந்தை, கலாச்சார மண்டபம் சுற்றுலா மையப்பூங்கா போன்றவற்றின் கட்டுமானப்பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட வேண்டும்.

ஏறாவூர் நகர் ஏறாவூர்பற்றுப் பிரதேசம் ஆகியவற்றில் கழிவு நீர் வடிகான் அமைப்புத்திட்டமும் உருவாக்கப்பட வேண்டும்.

அது மாத்திரமின்றி காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு நீர் வடிகான் அமைப்புத்திட்டம் மீளவும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்களை எனது தொகுதி மக்கள் சார்பாக முன்வைக்கின்றேன். இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

1 comment:

  1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நினைத்திருந்தால் அவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்போதோ  எங்களுக்கு உதவி இருப்பார்.

    அவர் இலங்கை முஸ்லிம்களுக்காக இதனைச் செய்ய மாட்டார்.

    மாறாக, அரபிகளும் இதர முஸ்லிம்களும் இலங்கைக்கு சுற்றுலா வர இதனை ஓர் நிபந்தனையாக பாவிக்கும்போது தகனத்தை விட்டுவிட்டு தானத்தை எதிர்பார்ப்பார்.

    காலவோட்டத்தில் அவர்களது இதர நிபந்தனைகளே இலங்கை முஸ்லிம்களை களி கொள்ளச் செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.