September 05, 2020

இறைவன் வழங்கிய சலுகையில் அலி சப்ரியோ, ரவூப் ஹக்கீமோ கை வைக்கக் கூடாது


முன்னாள் நீதி அமைச்சர் சகோதரர் Rauff Hakeem அவர்களும் இன்னாள் நீதி அமைச்சர் சகோதரர் Ali Sabri அவர்களும் பெண்களின் திருமண வயதில் இறைவன் வழங்கிய சலுகையில் (privilege) மாற்றம் கொண்டு வராமல், தவறாக (misuse) பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கொண்டு வரவேண்டும்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தினூடாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் தான் இந்த நாடு தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. 

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டம் சரத்து 9 இதின் பிரகாரம் புத்த மதம் (Buddhism) முதன்மை மதமாக (The foremost) பிரகடனப்படுத்தப் பட்டிருக்கின்றது. அதேநேரம் மற்ற இனத்தவர்களுக்கும் அவர்களுடைய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் சரத்து 10, 14 (1) e ஊடாக வழங்கப் பட்டிருக்கின்றன. இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சொற் பிரயோகத்தின் பிரகாரம் அனைத்து இன மக்களும் ஒரே மதத்தை பின்பற்ற வேண்டும் என்று திணிக்க முடியாது காரணம் அவரவருடைய மதத்தை பின்பற்றுவது அவர்களின் அடிப்படை உரிமை. இதன் காரணமாகத்தான் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சரத்து 10, 14 (1)e ஊடாக ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய மத சுதந்திரம் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது. ICCPR இலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது அதை இலங்கை அரசாங்கமும் ஏற்று அதில் கையொப்பம் இட்டுள்ளது (Sri Lankan government is one of the signatories). 

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டம் சரத்து 10, 14 (1) e ஐ மாற்ற வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகிறது காரணம் இது தனிநபர்களின் அடிப்படை உரிமை என்பதால். அது மட்டுமல்ல சர்வ தேசத்துக்கும் பதில் கூறவேண்டும்.

முஸ்லிம் மக்கள் அவர்களுடைய மதம் சார்ந்த விடயங்களை பின்பற்றும் போது குர்ஆன் கதீஸ் இல் உள்ளதை பின்பற்றுகிறார்கள் அவ்வாறு இருக்கும் போது ஏன் முஸ்லிம் சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஒரு தனிப்பட்ட நபர்களின் விடயங்கள் அவர்களுக்கும் இறைவனுக்கும் இடைப்பட்டது ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பங்கேற்கின்ற போதும், அதற்குள் விரிசல்கள் ஏற்படுகின்றபோதும் (திருமணம், விவாகரத்து, சொத்துப் பிரிப்பு போன்ற விடயங்கள்) ஒரு தீர்வு தேவைப்படுதின்றது. ஆரம்பகால கட்டங்களில் ஈமானிய தலைமைத்துவங்களால் தீர்த்து வைக்கப்பட்டது காலப்போக்கில் அது செயலிழக்க தொடங்கிவிட்டன. அதன் பின்னணியில் தான் முஸ்லிம் சட்டம் (Muslim Law) உருவாக்கப்பட்டன.

முஸ்லிம் சட்டம் இஸ்லாமிய சட்டம் அல்லது சரியா சட்டத்தில் இருந்து வேறுபட்டது அதேநேரம் இஸ்லாமிய சட்டத்தின் சில அம்சங்களை கொண்டுள்ளது. இது முதன் முதலாக டச்சுக்காரர்களின் ஆட்சியில் சட்டமாக தொகுக்கப்பட்டு (it was codified by Dutch rulers) அதன் பின்னர் வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் பாதுக்கப் பட்டு, 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜயவர்தன அவர்களின் வேண்டுகோலில் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் (Rule of equality) என்ற கேள்விக்கு உட்படுத்தப்படாமல் பாதுகாப்பதற்காக சரத்து 16 (1) ஐ உருவாக்கி பாதுகாக்கப்பட்ட விடயங்களில் ஒன்றான திருமண வயதை மாற்று மதத்தவர்கள் பிழையாக விளங்கி மாறுபட்ட வியாக்கியானம் கொடுக்கின்ற பொழுது அதற்கு தெளிவான விளக்கத்தை வழங்காமல் அந்த மாறுபட்ட வியாக்கியானத்தை அன்று முன்னைநாள் நீதி அமைச்சர் சகோதரர் Rauff Hakeem அவர்கள் சரி என்று விவாதித்தார், இன்று இன்னாள் நீதி அமைச்சர் சகோதரர் Ali Sabri அவர்களும் சரியென்று கூறி மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்.

இஸ்லாத்தில் பெண்களின் திருமண வயதெல்லை என்று ஒன்று வரையறை செய்யப்படவில்லை அதாவது ஒரு குறிப்பிட்ட வயதெல்லையைக் கூறி அதற்கு முன் திருமணம் தடுக்கப்படவும் இல்லை, அதற்கு பின் திருமணம் கட்டாயப் படுத்தப் படவும் இல்லை (there is no restriction and obligation) ஆனால் தவறுகளில் இருந்து கட்டாயம் தவிர்க்கப் படவேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

முதிர்ச்சி (Maturity) வயதெல்லை பெண்களுக்கு 18 என்று கூறுகின்றார்கள் ஆனால் முதிர்ச்சி என்பது ஒவ்வொரு நனி நபருக்கும்  வித்தியாசம் அதாவது 15 வயதில் உள்ள ஒரு பிள்ளையின் maturity 20 வயது உடைய ஒரு பிள்ளைக்கு சில வேளை இருக்காது.

இன்று 97 - 98 % பெண்பிள்ளைகள் 18 வயதிற்கு பின்பு தான் திருமணம் செய்கிறார்கள் மற்றவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் சற்று முந்தி திருமணம் செய்கிறார்கள். 

இஸ்லாம் எல்லாக் காலங்களுக்கும், எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற மார்க்கம் அதனால் தான் அந்த வல்ல இறைவன் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற வாறு மிகவும் அழகாக உருவாக்கி இருக்கிறான். 

தவறுகள் நடக்கின்ற பொழுது அதாவது நமக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தவறாக (misuse) பயன்படுத்தப் படுகின்ற பொழுது அதை தடுப்பதற்கு சட்டம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர இறைவன் மக்கள் தீங்குகளில் இருந்து தவிர்த்துக் கொள்வதற்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு எதிராக சட்டங்களை உருவாக்கக் கூடாது.

இங்கு தற்போதைய நீதி அமைச்சர் சகோதரர் Ali Sabri அவர்கள் misuse பண்ணுபவர்களை தடுப்பதற்கு செய்யவேண்டியது, 18 வயதிற்கு குறைந்த பெண்கள் திருமணம் முடிப்பதற்கான தகுந்த காரணங்களையும், ஆதாரங்களையும் உள்வாங்கி சரிபார்க்கும் சட்டபூர்வமான அதிகார சபையை (Board of authority) ஒன்றை உருவாக்குவதற்கான திட்டமொன்றை (proposal) பாராளுமன்றத்திலும், மந்திரி சபையிலும் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோன்று முன்னாள் நீதி அமைச்சர் (before 2015) சகோதரர் Rauff Hakeem அவர்கள் கடந்த நல்லாட்சி காலத்தில் படித்தவர்கள் புத்திஜீவிகளுடைய கலந்துரையாடலில் இஸ்லாத்தை தவறாக விளங்கி பெற்ற தனது சொந்தக் கருத்தான, கட்டாயம் 18 என்ற வயதெல்லையை அங்கு வந்தவர்களிடம் திணித்தது போன்றல்லாது, அதேபோன்று அவருடைய மந்திரி சபையில் 18ஐ வயது எல்லையாக சமர்ப்பித்தது போன்று இப்பொழுதும் செயல் படாமல் மேற்குறிப்பிட்ட மாற்றுவழியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இதைவிடவும் சிறந்த வழி இருந்தால் அதை சமர்ப்பிக்க வேண்டும்.

சட்டத்தின் நியதி என்னவென்றால் ஆயிரம் தவறிழைத்தவர் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. சட்டம் தெரிந்தவர்களே சட்டசபையில் இருந்து கொண்டு சட்டத்தை மதிக்கவில்லை என்றால் மக்களின் நிலை ??????

Dr. Anpudeen Yoonus Lebbe


5 கருத்துரைகள்:

this fellow's Rauff Hakeem and Ali sabri are trying to correct the law of the creator, they are thinking that the law of the almighty is expired.

On the minimum age limit for marriage, do those who vociferously demand a minimum age of 18 years, know that in the most advanced country in the world - the USA - as at July 2019, there was NO minimum age limit in 13 States in the USA?

Further, as of June 2020, in the 40 States that have set a minimum age limit, Only 4 States have set the minimum age limit at 18, while in 10 States it is 17 years, in 21 States it is 16 years, in 3 States it is 15 years and in 2 States it is 14 years.

In some countries in Europe also, similar patterns can be seen.

Even when there is a minimum age, in these countries,there is Provision in Law for the rule to be waived if the Parents agree to a lower age.

Is Sri Lanka more advanced than the USA and other countries in the West for some people to INSIST on a minimum age of 18 years?

Those who Insist on a Minimum Age of 18 years should be appraised about the Laws in the USA and the West so that they STOP Demanding a Minimum age of 18 years.

புனித திருக்குர்ஆன் மனித வாழ்வின் எல்லா காலங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதன் சந்திக்கும் பல்வேறு வகையான சவால்களுக்கு முகம் கொடுத்து மனிதர்கள் வாழ்வை வளப்படுத்த கூடிய பூரண வாழ்க்கை திட்டம் அதனுள் பொதிந்து ள்ளது என்பது நிதர்சனமான உண்மை என்பதை மறுக்க முடியாது.எனவே அது வரையறை செய்யாத திருமண வயதை எமக்கு வரையறை செய்வதற்கு நாம் எவ்வாறு உடந்தையாகலாம்?எவ்வளவோ கருத்துக்களையும் விடயங்களையும் உள்ளடக்கிய புனித திருக்குர்ஆன் திருமண வயதை ஏன் வரையறை செய்யவில்லை? எனவே
Dr.கருத்துக்கள் சிந்திக்க தக்கது.

I made a comment around 8.30 pm last night. It is almost 12 hours since I posted the comment which has still not been published. I wonder why. I am repeating the comment below and look forward to it being published soon.

Quote

On the minimum age limit for marriage, do those who vociferously demand a minimum age of 18 years, know that in the most advanced country in the world - the USA - as at July 2019, there was NO minimum age limit in 13 States in the USA?

Further, as of June 2020, in the 40 States that have set a minimum age limit, Only 4 States have set the minimum age limit at 18, while in 10 States it is 17 years, in 21 States it is 16 years, in 3 States it is 15 years and in 2 States it is 14 years.

In some countries in Europe also, similar patterns can be seen.

Even when there is a minimum age, in these countries,there is Provision in Law for the rule to be waived if the Parents agree to a lower age.

Is Sri Lanka more advanced than the USA and other countries in the West for some people to INSIST on a minimum age of 18 years?

Those who Insist on a Minimum Age of 18 years should be appraised about the Laws in the USA and the West so that they STOP Demanding a Minimum age of 18 years.

Unquote

I understod, but I dont understant the need of editors full photo here.

Post a comment