Header Ads



அம்பாறை கடற்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பலில் தீ - 19 பேர் காயம், உதவிக்கு இலங்கை கடற்படை விரைந்தது



அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் MT New Diamond எனும் கப்பல் இன்று (03) காலை தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் கப்பல் தீ விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும், குவைத்திலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற பனாமாவுக்குச் சொந்தமான குறித்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மீட்பு பணிகளுக்காக 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலையிலிருந்து 2 கப்பல்களும் அம்பாந்தோட்டையிலிருந்து ஒரு கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த கப்பலின் மாலுமி உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள், இலங்கை கடற்படையின் மற்றுமொரு கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், உதவிக்கு விமானப்படையும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. Helping others in need by Sri Lankan.

    ReplyDelete
  2. 'அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.'
    (அல்குர்ஆன் : 10:22)

    ReplyDelete

Powered by Blogger.