Header Ads



மரண தண்டனைக் கைதி பாராளுமன்றம் வருவதில் சிக்கல் - சபாநாயகருக்கும் சட்டமா அதிபருக்கும் மோதலா?


மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகடை சிறைச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜெய சேகரவை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு சிறைச் சாலை திணைக்களத்திற்குச் சபாநாயகர் அறிவித் துள்ளார்.

இந்நிலையில், வெலிகடை சிறையில் மரண தண்டனை அனுபவித்து வரும் பிரேமலால் ஜெயசேக பாராளுமன்றத் திற்குச் செல்வது தொடர்பாகச் சபாநாயகருக்கும் மற்றும் சட்டமா அதிபர் இடையே ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டவத்திலிருந்து பாராளு மன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதற்காக முன்னுரிமை வாக்கு களைப் பெற்ற பிரேமலால் ஜெயசேகரவின் பெயரைத் தேர்தல் ஆணையகத்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தமானியில் வெளியிட்டது.

பிரேமலால் ஜெயசேகரவை 8 ஆம் திகதி பாராளுமன்றத் திற்கு அழைத்துவருமாறு சிறைச்சாலை திணைக்களத் திற்கு சபாநாயகர் தெரிவித்தார்.

இருப்பினும், சட்டமா அதிபர் வழங்கிய சட்ட அறிவுறுத்தல் களின்படி செயலாற்றுவதாகச் சிறைச்சாலைகள் திணை க்களம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்குப் பாராளு மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு இருக் காது என சட்டமா அதிபர் சிறைச்சாலைகள் திணைக் களத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

1 comment:

  1. Very Very Shame. Where one country one Law..
    Hung this animal politician.

    ReplyDelete

Powered by Blogger.