Header Ads



அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் எடுத்துக் கொண்டுள்ள உறுதிமொழி இதுதான்


( இராஜதுரை ஹஷான் )

ஜனாதிபதி கோத்தாபய   ராஜபக்ஷ தலைமையிலான    அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு  நிகழ்வு  வரலாற்று  சிறப்பு மிக்க கண்டி   தலதா    மாளிகையில் மகுல்மடுவ  வளாகத்தில்  இன்று  -12- காலை  8.40  மணியளவில்  ஆரம்பமானது.   தேசிய  கீதம் இசைத்தலை தொடர்ந்து     பௌத்த மத அனுஷ்டானங்கள்  இடம் பெற்றன.

காலை  9.15 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  முன்னிலையில்   பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சரவை தொடர்பிலான அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள  கூட்டு சத்தியப்பிரமாண உறுதி மொழியை  பின்வருமாறு  குறிப்பிட்டார்கள்.

'இலங்கை  சோசலிஷ குடியரசின்  அரசியலமைப்பினை  பாதுகாத்தும்   நாட்டின் எல்லைக்குள்   பிறிதொரு   இராஜ்ஜியம் தோற்றம்  பெறுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ, ஆதரவு  வழங், நிதியுதவி வழங்கல்.    ஆகிய  செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல். இருப்பதாகவும்  குறிப்பிட்டுக் கொள்கிறேன்.  வழங்கப்பட்டுள்ள  அமைச்சரவை  சார் பொறுப்புக்களை திறம்பட மேற்கொண்டு முழுமையாக சேவையாற்றுவேன்.  என    கூட்டு  உறுதிமொழி வழங்கினார்கள்.

மாவட்ட   ஒருங்கிணைப்பு  குழு தலைவர் பதவிகளுக்கான நியமணங்களை  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  முதலில் வழங்கி வைத்தார்.  25 மாவட்டங்களுக்குமான      தலைவர் நியமணங்கள்  வழங்கப்பட்டன.  பாராளுமன்றத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களில் அதிகமானோருக்கு  மாவட்ட  தவைலர் பதவி வழங்கப்பட்டன.

இரண்டாவதாக 40  இராஜாங்க  அமைச்சர்களுக்கான    நியமணங்கள்   வழங்கப்பட்டன. கடந்த அரசாங்கத்தில்  அமைச்சு பதவி வகித்த  பலருக:கு இராஜாங்க அமைச்சு பதவிகளும், அமைச்சு பதவி வகித்தவர்களுக்கு  இராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டன. பலருக்கு    எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை.

மூன்றாவதாக  28 அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன   பாதுகாப்பு அமைச்சு பதவி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது.    நிதி மற்றும் புத்தசாசனம், மத விவகாரங்கள் ,  கலாச்சார அலுவல்கள் அமைச்சு    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு  வழங்கப்பட்டது.  28  அமைச்சுகளுக்கான  நியமன பத்திரங்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  வழங்கி வைத்தார்.  அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு  காலை  11 மணியளவில் நிறைவுப் பெற்றது.

இந்நிகழ்வில்  பௌத்த மத தலைவர்கள்,  அரசியல் பிரமுகர்கள், ஜனாதிபதியின்  பாரியார்,  பிரதமரின்  பாரியார்   என  பெரும்பாலானோர் கலந்துக் கொண்டார்கள்.

No comments

Powered by Blogger.