Header Ads



பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 8 பெண்களின் விபரம்

இம்முறை பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 8 பெண் வேட்பாளர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள னர்.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 8 பெண் வேட்பாளர்களில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 3பேர் தெரிவாகி இருக்கின்றனர். அவர்களில் பவித்ரா வன்னியாரச்சி, முதித்தா சொய்ஸா, தலதா அத்துகோரள , கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, கோகிலா குணவர்த்தன ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் கேகாலை மாவட்டத்திலிருந்து ராஜிகா விக்ரமசிங்க , காலி மாவட்டத்திலிருந்து கீதா குமாரசிங்க , மாத்தளை மாவட்டத்திலிருந்து ரோஹினி கவிரத்ன .

இதேவேளைக் கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்து வப்படுத்திய 12 பெண் பிரதி நிதிகளும் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

அவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ஹிருனிகா பிரேமசந்திர, துசிதா விஜேமான்ன, சந்திராணி பண்டார, பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சிறியானி விஜேவிக்ரம, சுமேத்தா ஜயசிங்க. ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் , தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட சாந்தி ஸ்ரீஸ் கந்தராஜா ஆகிய 7பேர் தோல்வியுற்றுள்ளனர்.

இருப்பினும், அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேசிய பட்டியல்கள் வழியாகப் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர் களைப் பொறுத்து பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதி களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க் கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.