Header Ads



நிராகரிக்கப்பட்ட 7 இலட்சத்து 44000 வாக்குகளும், அதற்கான 4 பிரதான காரணிகளும்

(எம்.மனோசித்ரா)

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நூற்றுக்கு 4.58 சதவீதமாகக் காணப்பட்டாலும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகளவான எண்ணிக்கையாகும்.

இம்முறை தேர்தலில் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். இதில் ஒரு கோடியே 23 இலட்சத்து 43 ஆயிரத்து 302 பேர் வாக்களித்திருந்தனர். இது நூற்றுக்கு 75.89 சதவீதமாகும்.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் ஒரு கோடியே 15 இலட்சத்து 98 ஆயிரத்து 929 வாக்குகள் செல்லுபடியானவை என்பதோடு 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகளை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. பொது மக்களின் தேர்தல் அறிவு , முறையாக வாக்களித்திருக்காமை , தவறான தெரிவுகள் ( கட்சி , இலக்கம் ) என்பவற்றோடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக பெரும்பாலான ஐ.தே.க. ஆதரவாளர்கள் வாக்களிப்பை தவிர்த்திருந்தமை என்பனவே அந்த காரணிகளாகும்.

2015 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட 4 கோடியே 99 இலட்சத்து 904 வாக்குகளில் 18 ஆயிரத்து 770 வாக்குகள் மாத்திரமே நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

2 comments:

  1. 49,900,904 votes in Sri Lanka???????????

    ReplyDelete
  2. மேற்குறிப்பிடப்பட்டவை எல்லாம் மிகவும் பொருததமான காரணங்கள் அல்ல. பன்னெடுங்காலமாகவே எண்ணிலடங்காத புததிஜீவிகள்கூட இலங்கையின ஆட்சிமுறைமையிலும் மற்றும் தேர்தல் முறைமையிலுமுள்ள தமது வெறுப்பின் காரணமாக தமது வாக்குகளை வீணடிக்கின்றனர். பிரபல நகரப்புற வாக்காளர்களுடைய வாக்குகள்தாம் மிகவும் பெருமளவில் சேதமாக்கப்படுகின்றன. அவரகள் படிக்காதவரகளா? இப்படியான வாக்கு சேதாரம் ஐரோப்பிய அமெரிக்க மற்றும் அவுத்திரேலியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் நடப்பதில்லை. காரணம் அங்கு எவர ஆட்சிக்கு வந்தாலும ஆட்சி முறைமை மக்கள் விருப்பத்தின்படி அரசியல் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாகும்.

    Not all of the above are very relevant reasons. For many many years, even number of genius people have been wasting their votes because of their hatred of the Sri Lankan regimes and electoral system. The votes of popular urban voters are being badly damaged. Are they illiterate? Such vote-rigging is not uncommon in countries such as Europe, the US and Australia. The reason is that whoever comes to power there, the system of government is governed by the will of the people.

    ReplyDelete

Powered by Blogger.