Header Ads



தப்பிச் சென்ற கொரோனா நோயாளியை ஏற்றிச்சென்ற, முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தல்

ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். அவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டிச் சாரதியும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து இன்று காலை 41 வயதான மொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரை தேடி கண்டுபிடிக்கும் நோக்கில் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த நபர் கோட்டை, பிரதான வீதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலமே கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதிக்குச் சென்றுள்ளார். அவரை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.