Header Ads



போதைப்பொருளிலிருந்து எதிர்கால சமூகத்தை, பாதுகாத்து தருமாறு ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை


அரச நிறுவனங்களுக்குத் தேவையான தளபாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து மட்டும் பெற்றுக்கொள்வதற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

உள்நாட்டு வர்த்தகத் துறையை அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும் என்று பத்தரமுல்ல தலவத்துகொட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மொரட்டுவ தளபாட உற்பத்தியாளர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இம்மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பிரதேச மக்கள் தமது பிரச்சினைகளை தெளிவான முறையில் ஜனாதிபதி அவர்களுக்கு முன்வைத்ததுடன், போதைப்பொருளில் இருந்து இளைஞர் சமுதாயத்தை காப்பாற்றித் தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கொழும்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வேட்பாளர் ஜகத் குமாரவினால் பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

அனுமதியின்றி வசித்து வருபவர்களின் துன்பங்கள் பற்றியும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சிறைச்சாலை கைதிகளின் பராமரிப்புக்கு அரசு செலவு செய்யாமல், அவர்களை பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடுத்தி செலவுகளை நிறைவு செய்து கொள்வது தொடர்பாக மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு கருத்து தெரிவித்தனர். 

நவகமுவ, அத்துருகிரிய, தலங்கம வைத்தியசாலைகளை நவீனமயப்படுத்தல் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார். 

பாடசாலை மாணவர்களின் அதிக நிறை கூடிய பாடசாலை புத்தக பைகளுக்கு பதிலாக இலகுவான புத்தகப் பைகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

47 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.திலகரத்ன உட்பட பலர் ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு இங்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர். 

வேட்பாளர் மதுர வித்தானகே கோட்டை நகர சபை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். ETI வைப்பாளர்களுக்கு இயன்றளவு சலுகைகளை வழங்குவதாக அங்கு வினவப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

போதைப்பொருளிலிருந்து எதிர்கால சமூகத்தை பாதுகாத்து தருமாறு இங்கும் மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். 

மதுர வித்தானகேயின் கொள்கைப் பிரகடனம் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.28  

1 comment:

Powered by Blogger.