Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை, கைப்பற்ற சம்பிக்க முயற்சி - ரவி குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பல முறைகேடுகள் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விடயங்களை அம்பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கியதேசிய கட்சியின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராகயிருந்தவேளையிலும்,ஏனைய அரசாங்கங்களில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த வேளையிலும் இடம்பெற்ற பல முறைகேடுகள் குறித்த விபரங்கள் தன்னிடம் உள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 மூடிமறைக்கப்பட்ட பல முறைகேடுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள அவர் அவற்றை மூடிமறைப்பதற்காக ரணவக்க ஆட்சிகளையும் கட்சிகளையும்; மாற்றினார் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராகயிருந்த ரவி கருணாநாயக்க பின்னர் மைத்திரிபாலசிறிசேன அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முடக்கினார் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் சிறிசேனவிற்கு துரோகமிழைத்த பின்னர் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்தார் இதுவும் அவரின்சந்தர்ப்பவாத முயற்சியே எனவும் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு துரோகமிழைத்துவிட்டு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் தற்போது அவர் ஐக்கியதேசிய கட்சிக்கு துரோகமிழைத்துவிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது முறைகேடுகளை ஊழல்களை மறைப்பதற்கு சம்பிக்க ரணவக்க தனது விசுவாசங்களை மாற்றிக்கொண்டிருந்துள்ளார்,எனினும் இதற்கு மேல் அவர் இதனை தொடர அனுமதிக்கப்போவதில்லை அவரின் முறைகேடுகள் அனைத்தும் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சபாஷ். சரியான பைட்.இவர்களுடன் ( ரனில்,சஜித்,சம்பிக்க,ரவி) ஹக்கீம்,றிசாட் ஆகியோரை எப்போது பட்டியலிடுவீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.