Header Ads



பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எமது, ஆட்சியில் சொந்த காணிகளை வழங்குவோம் - இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நட்டத்தை எதிர்நோக்கி வரும் பெருந்தோட்டதுறை கம்பனிகளுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் அங்கு தொழில்புரிந்து வரும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கப்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர்மாகார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை -18- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுவந்த ஜயவர்தனபுர  பல்கலைக்கழகம் இந்த பரிசோதனைகளிலிருந்து விலகியமைக்காண காரணம் என்ன ? அரசாங்கத்தின் அச்சுறுதல்களா? இதனுடன் தொடர்புடைய உண்மை விவகாரங்களை அரசாங்கம் மறைக்காமல் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது ஒரு ஜனநாயகதன்மை மிக்க நாடாகும்.நாங்கள் தேர்தலுக்கு முகங்கொடுக்க பயந்து இது தொடர்பில் கேள்வியெழுப்புவதாக கூறுகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றது.

பெருந்தோட்ட துறையை முன்னேற்றுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் இவர் ஜனாதிபதி தேர்தல் பிரசாங்களிலும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் பெருந்தோட்ட துறை தொடர்பில் ஆராய்ந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக அரசியல்வாதிகள் மற்றும் இத்துறைச்சார்ந்த தேர்ச்சி பெற்றவர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

அதற்கமைய தற்போது நாட்டுக்கும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் மீதும் சுமையை சுமத்தி வரும் கம்பனிகள் தொடர்பில் அந்த குழு அவதானம் செலுத்தியுள்ளது. பெருந்தோட்டத்துறை பயிர்ச்சைய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகளில் வாழ்ந்துவரும் சிலர் சிறு தேயிலை பயிர்செய்கை மூலம் சிறந்த வருமானம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் நட்டத்தை எதிர்நோக்கிவரும் கம்பனிகளுக்கு சொந்தமான பெருந்தோட்ட பயிர்ச் செய்கை காணிகளை அதில் தொழில் புரிந்துவரும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் இது தங்களின் நிலம் எனக்கருத்தி மேலும் அக்கறையுடன் செயற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதுடன் , வருமானமும் அதிகரிக்கும்.  இதேவெளை அப்பகுதிகளில் தொழிலின்றி இருப்பவர்களையும் இந்த வேலைத்திட்டங்களில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டிலுள்ள அனைத்து துறைகள் தொடர்பாகவும் செயற்படும் விதங்கள்ட தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக குழு நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருக்றது.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முன்னேற்றகரமாக பல செயற்திட்டங்களையும் மேற்கொள்ளும்.

(செ.தேன்மொழி)

No comments

Powered by Blogger.