Header Ads



வைரஸுக்கு அரசனா அல்லது பாமர ஏழையா என்று தெரியாது

உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். இந்த சம்பவம் வைரஸ் குறித்த உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளது என கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள பிரேசில் அதிபருக்கு உலக சுகாதார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வராமல் தவிர்த்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜேர் போல்சோனாரோ. கரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது, மக்கள் சமூக விலகல், முக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர்.

மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வந்தார்.

அவர் போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை.தலைநகர் பிரேசிலியாவை விட்டு அதிபர் போல்சோனாரோ எங்கு சென்றாலும் அவர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், உத்தரவை அவர் மதிக்காவிட்டால் அவர் நாள்தோறும் 390 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான மைக்கல் ரயான் பிரேசில் அதிபர் விரைவில் பூரண குணமடைய வேண்டிய வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில்,'பிரேசில் அதிபர் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். இந்த சம்பவம் வைரஸ் குறித்த உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு நாம் அனைவரும் இலக்குகள் தான். வைரஸுக்கு அரசனா அல்லது பாமர ஏழையா என்று தெரியாது. வைரஸால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதையே இது காட்டுகிறது’’ எனக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.