Header Ads



முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து வருகின்றனர்.

தேர்தல் வெற்றியின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்களை குறைப்பது என தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி தனித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறும் முதலாவதும் சந்தர்ப்பமாக இம்முறை பொதுத் தேர்தல் அமையும்.

எந்த கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாத வகையில் ஜே.ஆர். ஜெயவர்தன இந்த தேர்தல் முறையை உருவாக்கினார். எனினும் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் தீர்மானங்கள், வேலைத்திட்டங்கள், மக்களுக்கு அவர் மீதுள்ள நம்பிக்கை என்பனவே இதற்கு காரணம். இதனால் நிச்சயமாக நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்வோம்.

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. பிளவுப்பட்டுள்ள நிலைமையில் இந்த கட்சியினை சேர்ந்த 20 வீதமான ஆதரவாளர்கள் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். மலையக மக்களும், முஸ்லிம் மக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து வருகின்றனர். 150 ஆசனங்களுக்கு மேலதிகமான ஆசனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றும்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு தனித்த அதிகாரங்களை வழங்க வேண்டாம் என வடக்கில் உள்ள அடிப்படைவாத கட்சிகள் கூறுகின்றன. அப்படி தனி அதிகாரத்தை கொடுத்தால் நாடு ஆபத்துக்குள் செல்லும் என அந்த கட்சிகள் கூறுகின்றன.

அவர்கள் அடிப்படைவாதத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சித்து வருகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் கோட்டாபய ராஜபக்சவை தோற்கடிக்க முயற்சித்தனர். வடக்கு தெற்கு என்றில்லாமல் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர தீர்மானித்தனர்.

மத்திய மாகாணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறும். கண்டி மாவட்டத்தில் நிச்சயமாக நாங்கள் 9 ஆசனங்களை கைப்பற்றுவோம். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தொலைபேசியில் கதை முடிந்து விட்டது. ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கும் ஆதரவு கூட சஜித் பிரேமதாசவுக்கு இல்லை.

அதேவேளை தேர்தல் ஆணைக்குழு சில நேரங்களில் வெளியிடும் விதிமுறைகள் காரணமாக நாங்கள் எப்படி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது என்பது புரியவில்லை. இப்படியான தேர்தல் ஆணைக்குழுவுடன் தேர்தலை நடத்த முடியாது.

அரச அலுவலங்களில் தேர்தல் அலுவலங்களை வைக்க முடியாதாம், கூட்டங்களை நடத்த முடியாதாம். தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் 100 வீதம் ஏற்றுக்கொள்கிறோம்.

கூட்டங்களை நடத்த வேண்டாமாம், சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாமாம், பதாகைளை வைக்க வேண்டாமாம். வீடுக்கு வீடு சென்றும் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்கின்றனர்.

அப்படியானால் எப்படி தேர்தல் பிரச்சாரங்களை செய்வது?. இதனால் தேர்தல் வெற்றிக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களில் உடனடியாக மாற்றம் செய்ய வெண்டும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. எஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஃபாரிஸ் ஹஜியாராய் ஒருமனதாக வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
    முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தாங்களாகவே செயல்படத் தொடங்கியுள்ளனர், மேலும் கோதபயாவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். கோட்டாபயா, மஹிந்த வின் வெற்றியை வெற்றிபெறச் செய்வதற்கான திறனுக்குள் முடிந்த அனைத்தையும் “முஸ்லீம் குரல்” செய்யும், இன்ஷா அல்லாஹ். முஸ்லிம் வாக்கு வங்கி, முஸ்லீம் சிவில் சமூக தலைவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் உலமா சபாய் தலைவர்களின் துரோகத்தை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அவர்கள் "அதிருப்தி" அடைந்துள்ளனர், அவர்கள் தங்கள் அதிருப்தியைக் காட்டத் தொடங்கியுள்ளனர், மேலும் இந்த ஏமாற்றும், சந்தர்ப்பவாத முஸ்லீம் அரசியல்வாதிகள், முஸ்லீம் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களின் தலைவர்கள், முஸ்லீம் சிவில் சொசைட்டி தலைவர்கள், சமூகத் தலைவர்கள் , உலேமா சபாய் தலைவர்களுக்கு ஏதிராக பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் நியாயமான "முஸ்லீம் உரிமைகளை" பாதுகாத்து, "தேசிய நல்லிணக்கத்தை" நோக்கி செயல்படுகிராகள்.எஸ்.எல்.எம்.சி, ஏ.சி.எம்.சி மற்றும் என்.யு.ஏ தலைவர்களின் கைக்கூலிகளால் நடத்தப்பட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் ஊடக நாடகங்களால் அவர்கள் ஏமாற்றப்படுவதற்கு இனி தயாராக இல்லை. முஸ்லீம் இளைஞர்களும் சமூகத்தின் இளம் தொழில் வல்லுநர்களும் இந்த மோசடிகளுக்கு சவால் விட “சமூக மீடியாவை” பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆகஸ்ட் 5, 2020 அன்று நடைபெறவிருக்கும் அடுத்த தேர்தல்களில், நிச்சயமாக முஸ்லிம்கள் "கூட்டு எதிர்க்கட்சி" / "எஸ்.எல்.பி.பி அதிகாரத்திற்கு வாக்களிக்க சிந்திக்கிறார்கள். இலங்கையில் ஒரு புதிய முஸ்லீம் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மஹிந்த ராஜபக்ஷவை அவர்கள் ஸ்ரீ லங்காவின் அடுத்த பிரதமராக வாக்களிப்பார்கள், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam , Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. dear muslim brother sister
    for sake of allah dont vote following party
    podujana [paramuana-- rjapaksa thugs regirment
    unp ---ranil fox
    slfp ---mithree donkey

    in case of vote these culprit , future ready to face their lot of plot against tamil muslim
    ex birth cerificate matter
    hijab matters
    muslim marriage law

    your daughter will be difficultly go to any where into srilanka , because abduct your daughter by shinkal gents forcibly will marry
    the reason for removing religious identity into birth certificate

    ReplyDelete

Powered by Blogger.