Header Ads



நாட்டில் வாழும் முழு முஸ்லிம், சமூகத்தையும் நோவினைப்படுத்த முடியாது - சஜித்

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன்மூலம் தமது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக முன்னெடுக்கும்; அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் கற்பிட்டியைச் சேர்ந்த ஏ.சி.சலாஹூதீனை ஆதரித்து நேற்று (30) கற்பிட்டி நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களான ஹெக்டர் அப்புஹாமி, சாந்த அபேசேகர, அசோக வடிவமங்காவ, சட்டத்தரணி சித்ரால் பர்னான்டோ, விக்டர் அண்டனி, கோகுல்நாத் சிங், ஏ.சி.சலாஹூதீன், கிங்ஸ்லி லால், நிரோஷன் பெரேரா உள்ளிட்ட பிரதேச சபை, நகர சபை உறு;பபினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூநுறுகையில், நான் பௌத்த மதத்தைச் சார்ந்தவன். எனினும் ஏனைய மதங்களையும் , அந்த மதங்களைச் சார்ந்த மக்களையும் மதிக்க வேண்டும் என்பதிலும் யாரையும் மதங்களின் பெயரைக் கூறி எக்காரணங்களு;ககாகவும் நோவினை செய்யக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். நான் இனவாத செயற்பாடுகளை முழுமையாக வெறுப்பவன். 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஒரு சிறிய ஆயுததாரிகள் குழு ஒன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்காக இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்தையும் நோவினைப்படுத்த முடியாது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படையால் எனது தந்தை பிரேமதாச படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் என்பது தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு ஆயுதக்குழு. எனவே, அந்த குழு எனது தந்தையை படுகொலை செய்தார்கள் என்பதற்காக நான் தமிழ் மக்களை எவ்வாறு பழிவாங்க முடியுhமா. அதுபோலதான் முஸ்லிம் மக்களையும் ஏனையவர்கள் பார்க்க வேண்டும். 

புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் களமிறங்கியுள்ள அணியிலுள்ளவர்களைப் பாருங்கள். அவர்களுடைய பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதுபோலதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள். ஆக, ஸ்ரீ.பொ.பெரமுனவும், தராசு கூட்டணியும் ஒரு செய்தியையே சொல்கின்றன. ஆனால், எங்களது டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் அணியை பாருங்கள். தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். 

எமது அணியிலுள்ளவர்ளிடம் இனவாதம் இல்லை. பிரதேசவாதம் கிடையாது. அவர்கள் கள்வர்கள் இல்லை. மணல் கொள்ளையடிப்பவர்களும் இல்லை. இனங்களுக்கடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு இருப்பவர்களே எமது இணியில் உள்ளார்கள். 

முதலில் இனவாத சிந்தனையை களைய வேண்டும். நான் இனவாத சிந்தனைக்கு எதிரானவன். எந்தவொரு சமூகமும் இன ரீதியாக , சமய ரீதியாக ஒடுக்கப்படுவதை நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். அதற்கு எதிராக குரல் கொடுப்பேன். இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். 

கடந்த நல்லாட்சியில் யாருமே எதிர்பார்த்திராத வகையில் இலங்கையில் பாரிய அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்தினோம் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். அதுபோல எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதிகூடிய ஆசனங்களை பெற்று நாமே ஆட்சி அமைப்போம் என்பதில் இரு கருத்துக்கள் கிடையாது. 

எனது ஆட்சியில் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் சிங்களம் மக்களை பாதுகாத்து அவர்களது சமயக் கடமைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும், எவ்வித தடையுமின்றி சமய, கலாச்சார உரிமைகளை பின்பற்றுவதற்கும் சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுப்பேன். 

அத்துடன், இலங்கையில் 548 கிராம சேவகர் பிரிவுகளும், 1769 கிராமங்களும் இருக்கின்றன. எனது தந்தை அமரர் ரணசிங்க பிரேமதாச அன்று முன்னெடுத்த ´கிராமோதய மண்டலய´ போன்று எதிர்காலத்தில் நானும் நகர மற்றும் கிராம மட்டங்களில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன். 

குடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விட அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்ட மக்கள் எனக்கு கூடுதலான வாக்குகளை வழங்கி என்னை கௌரவப்படுத்தினார்கள். 

இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அதுபோல பொதுத் தேர்தலிலும் எமது கரங்களைப் பலப்படுத்துங்கள். அதிகூடுதலான ஆசனங்களைப் பெற்று நாமே ஆட்சி அமைப்போம். ஆமைய இருக்கின்ற புதிய அரசில் புத்தளம் மாவட்டத்திற்கு கூடுதலான அமைச்சுப் பதவிகளை வழங்கி நான் உங்களை கௌரவப்படுத்துவேன் என்றார்.

No comments

Powered by Blogger.