Header Ads



அரச ஊழியர்கள் 60 வயதுடன் ஓய்வு பெறும்போது, அரசியல்வாதிகள் 70 வயதுக்கு மேல் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்


(செ.தேன்மொழி)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே தோல்வியடைந்த தலைவர்கள். வயது முதிர்ந்த இவ்விருவரையும் மீண்டும் தெரிவு செய்வதில் எவ்வித பயனுமில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மோசடிக்காரர்கள் என்று நாட்டு மக்கள் விமர்சித்து வருகின்றனர். அவ்வாறிருப்பினும் தத்தமது பிரதிநிதிகளை மக்களே தெரிவுசெய்கின்றனர். எனவே இம்முறை எக்கட்சிக்கு வாக்களிப்பினும், சிறந்த செயற்திறன் மிக்க உறுப்பினர்களைத் தெரிவு செய்யவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று -10- வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ஒரு கட்சியையும் , பிரதமர் இன்னுமொரு கட்சியை சேர்ந்தவாரகவும் இருந்தால் ஆட்சியில் சிக்கல் ஏற்படும் என்று ஆளும் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது . ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் மாத்திரமல்ல , முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரத்துங்கவுடனும் இணைந்து செயற்பட முடியாமல் போனது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இதேவேளை அவருடன் சிறந்த செயற்திறன் மிக்க பலரும் இணைந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்தகாலத்தில் ஏற்பட்ட சிக்கல் நிலைமைகள் தற்போது ஏற்பட வாய்ப்பில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகனே தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்தும் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக் கொள்வதற்காக போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மோசடிகாரர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். ரணில் , மஹிந்த ஆகியோரின் வயது எழுவதையும் தாண்டி விட்டது. இந்நிலையில் இவர்களையே மீண்டும் தெரிவுச்  செய்வதால் நாட்டுக்கு எந்தவித பயன்தரும் செயற்பாடுகளும் இடம்பெறப்போவதில்லை. இந்நிலையில் இவர்களிருவருமே சித்தியடையாத தலைவர்கள். சஜித் பிரேமதாசவே இம்முறை சித்தியடைந்த தலைவராக காணப்படுகின்றார். 53 வயதுடைய அவருக்கு 58 வரையில் மக்கள் ஆட்சிப் பொறுப்பை பெற்றுக் கொடுத்து பார்க்கலாம். அவரது செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி ஏற்படாவிட்டால் அவரை நிராகரிக்கலாம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருமே மோசடி காரர்கள் என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை நாங்கள் தெரிவுச் செய்வதில்லை மக்கள் தான் தெரிவுச் செய்கின்றனர். எந்த கட்சிக்கு வாக்களித்தாலதும் , அந்த கட்சியில் போட்டியிடும் சுற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத , சிறந்த செயற்திறன் மிக்க உறுப்பினர்களை தெரிவுச் செய்ய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் சிறந்த செயற்திறன் மிக்க திறமையான உறுப்பினர்களே இம்முறை களமிறங்கியுள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கியிருந்தாலும் , ஆட்சியில் ஏற்பட்ட சில குறைப்பாட்டின் காரணமாக அரச உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி தேர்தலின் போது எம்மை நிராகரித்திருந்தனர். ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் தங்களுக்கு என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலதிக கொடுப்பனவு , விசேட கொடுப்பனவுகளை இரத்து செய்துள்ளதை போன்று , தேர்தலையும் அரசாங்கம் வெற்றிக்  கொண்டாள் முழு சம்பள தொகையையும் அறவிடவாய்ப்புள்ளது. இந்நிலையில் வாக்களிக்கும் போது நன்கு சிந்தித்து வாக்களியுங்கள் . அதேவேளை எமது ஆட்சியில் இந்த சிக்கல்களுக்கு தீர்வுப் பெற்றுக் கொடுப்பதுடன் , இராணுவத்தினரின் ஈணைக்கு கீழ் அரச உத்தியோகத்தர்கள் செயற்படு வேண்டும் என்று அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள வேலைத்திட்டங்களையும்  இல்லாமலாக்குவோம்.

இதேவேளை அரச ஊழியர்கள் 60 வயதுடன் ஓய்வுப் பெறவேண்டும் என்று குறிப்பிடப்படும் போது , அரசியல் வாதிகள் மற்றும் 70 வயதுக்கு மேலும் செயற்பட்டு வரும் முறையை இல்லாமலாக்க வேண்டும். இவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டால் , அரச உத்தியோகஸ்தர்களுக்கும் அந்த சந்தரப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

2 comments:

Powered by Blogger.