Header Ads



5 ஆம் திகதி தேர்தல் நடைபெறுமா என்பதை, அப்போதைய நிலைமையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் - மஹிந்த

கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தால் ஆகஸ்ட் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறுமா என்பதை அப்போதைய நிலைமையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டவாறு இன்று ஆரம்பமாகின்றது. அநுராதபுரம் மாவட்டத்தில் இராஜாங்கனைப் பிரதேச செயலகப் பகுதியில் மட்டும் தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்குமா? இல்லையா? அல்லது ஓகஸ்ட் 5ஆம் திகதி திட்டமிட்டவாறு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை என்னால் இப்போது உறுதிபடக் கூற முடியாது. ஏனெனில், நான் சோதிடம் பார்க்கும் நபர் அல்லன்.

தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பொறுத்த வரை திட்டமிட்ட திகதிகளில் அதற்குரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். வாக்காளர்களினதும் எங்களினதும் பாதுகாப்புக் கருதி சுகாதார வழிகாட்டல்களுக்கு அதி முக்கியத்துவம் வழங்கி எமது பணிகளை முன்னெடுக்கின்றோம்” என்றார்.

1 comment:

  1. நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
    (அல்குர்ஆன் : 31:34)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.