Header Ads



UNP யின் அழிவுக்கு சஜித் பொறுப்பு, இறுதி துரும்புச்சீட்டும் இல்லாமல் போயுள்ளது - நாமல்

நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக தேர்தலை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இருந்த இறுதி துரும்புச் சீட்டும் இல்லாமல் போயுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெலியத்தை சிட்டினமலுவ பிரதேசத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சகல தரப்பினரின் நிலைப்பாடுகளை ஆராய்ந்து நாடு மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேவையை நிறைவேற்றவே பெரும்பாலும் தேர்தல் ஆணைக்குழு முயற்சித்தது. முடிந்தவரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு தேவையான வகையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவர்கள் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தனர். இதனையே நாங்கள் பார்த்தோம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக நாட்டு மக்கள் தமக்கான அரசாங்கத்தை தற்போது தெரிவு செய்ய முடியும். தமக்கு தேவையான பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை கட்சிக்குள் தீர்க்க அந்த கட்சிக்கு தெரிந்திருக்க வேண்டும். எம்மீது குற்றம் சுமத்துவதில் பயனில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை தேட எமக்கு நேரமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அழிவுக்கு சஜித் பிரேமதாச பொறுப்புக் கூற வேண்டும். தலைமைக்கு எதிராக தலைமையுடன் மோதி கட்சியை மாத்திரமல்ல, மாவட்ட மக்களையும் காட்டிக்கொடுத்து விட்டு மாவட்டத்தை கைவிட்டு சென்றுள்ளார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.