Header Ads



பேராசிரியர் ஹூலின் இரட்டை பிரஜாவுரிமை, தேர்தல் ஆணைக்குழு மீது பீரிஸ் கடும் விமர்சனம்

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிற்கு எதிரான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் ஹூல் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தாங்கள் செய்த முறைப்பாடு குறித்து தேர்தல் ஆணைக்குழு இன்னமும் பதிலளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு செயற்பட்ட விதம் எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கதாகயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் விருபபிலக்கம் ஒதுக்கப்படும் வரை தேர்தல் ஆணைக்குழு எவ்வாறு வேண்டுமென்றே தேர்தல்களை தாமதித்தது என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு செயற்பட்டவிதம் குறித்து நாங்கள் திருப்பியடையவேயில்லை என தெரிவித்துள்ள அவர் சட்டத்தில் காணப்பட்ட பாரிய குறைபாடுகள் காரணமாக கடுமையான விளைவுகள் ஏற்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமையை கொண்ட பேராசிரியர்ஹூல் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக விளங்குவதன் அபத்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஜி.எல். பீரிஸ் 19 வது திருத்தம் இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டவர்கள் ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதை தடை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு எவ்வாறு இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள ஒருவரை உள்வாங்கியது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் அதிகாரத்தை செலுத்தும் நிலையில் உள்ளமை கடும் கரிசனைக்குரிய விடயம் என்பதால் இந்த முழு அமைப்பு குறித்தும் மீள ஆராயவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் லிற்கு ஆதரவளிப்பதற்காக மகிந்த தேசப்பிரியவை கடுமையாக சாடியுள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் காணப்பட்ட போதிலும் மகிந்த தேசப்பிரிய அவரை பாதுகாத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. where were you when, the current president contested in the last presidential election, whilst a American

    ReplyDelete
  2. What about your party organizer, Basil Rajapakshe ? Foolish Jil Pappa

    ReplyDelete

Powered by Blogger.