Header Ads



விமலில் கடுப்பாகிய கோட்டா

– ஆர்.சிவராஜா –

அமைச்சர் விமல் வீரவன்ச சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில் ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் விடயங்களை கையாளும் மேலதிக செயலாளர்  – முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயை சாடிப் பேசியிருந்தார்.அதேசமயம் முன்னாள் எம் பி மிலிந்த மொரகொட நடத்தும் பாத்பைண்டர் அமைப்பை ,வெளிநாட்டு உளவு நிறுவனம் என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டினார். இப்படி சொல்வதால் ஏற்படும் அரசியல் விளைவுகளை தாம்  எதிர்நோக்கத் தயாரென்றும் அவர் கூறியிருந்தார்.

அமைச்சர் விமலின் இந்தக் கருத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடும் அதிருப்தியை – ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் கோட்டாவின் அமெரிக்க பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்படும் விடயத்தில் மிலிந்த மொரகொட பெரும் பணியை ஆற்றியிருந்தார்.அதேபோல அவரின் பாத்பைண்டர் அமைப்பு கூட பல சமூகப் பணிகளை ஆற்றியிருக்கிறது .மறுபுறம் ஜயநாத் கொலம்பகே அடுத்த வெளிவிவகார செயலராக நியமிக்கப்பட உள்ள ஒருவர்.கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை கொழும்பு கொண்டுவருவதற்கு பெரிதும் பாடுபட்டு அதற்காக ஜனாதிபதியிடம் நன்மதிப்பை பெற்றவர்.

இப்படியானவர்களை பொதுவெளியில் விமரிசித்த அமைச்சர் விமல் தொடர்பில் அதிருப்தியடைந்த கோட்டா ,இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தகவல் .அரசியல் காரணங்களுக்காக தமக்கு நெருக்கமானவர்களை விமர்சிப்பது நல்லதல்லவென கோட்டாபய இதன்போது அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டாரென உள்வீட்டுச் செய்திகள் சொல்கின்றன.

No comments

Powered by Blogger.