Header Ads



கொரோனா ஆபத்து காரணமாக ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க முடியாது- சுகாதார அமைச்சர்

பொதுமக்கள் ஒரு இடத்தில் பெருமளவில் ஓன்றுகூடுவதால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரித்துள்ள அரசாங்கம் அவ்வாறாக மக்கள் ஒரு இடத்தில் ஒன்று திரள்வதை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சில குழுக்கள் பொது இடத்தில் ஒன்றுதிரள்வதற்கு முயல்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பொதுமக்கள் ஓரிடத்தில் ஓன்றுதிரள்வதால் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு கொரோhனா காணப்பட்டாலும் ஏனையவர்களிற்கு அது பரவும் ஆபத்துள்ளது என்பதால் ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க முடியாது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பெருமளவில் ஒரிடத்தில் ஒன்றுகூடுவது மீண்டும் ஆரம்பமானால் நாட்டில் பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தனிமைப்படுத்தும் சட்டத்திற்கு எதிரானது என்பதால் மக்களை ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கவேண்டும் என சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

  1. This is similar to funeral procession of Late Arumugam Thondaman.This shows double standard people gathering.

    ReplyDelete

Powered by Blogger.