Header Ads



'போதைப்பொருள் ஒழிப்பை தடுக்கவே ஈஸ்டர் தாக்குதலை நடத்தினர்' - மீண்டும் அடித்துக் கூறுகிறார் மைத்திரிபால

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தை முடக்கவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குரங்கொட தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணியின் மாநாட்டில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

தனது ஆட்சிக்காலத்திலேயே போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகள் வலுவாக இடம்பெற்றனவெனவும்,  அவற்றை தடுப்பதற்காகவே தான் மரண தண்டனையை அமுல்படுத்த முன்வந்திருந்ததாகவும், போதைப்பொருள் வியாபாரிகளே அதற்கு எதிராக நீதிமன்றம்​ சென்றிருந்தனர் எனவும் சாடினார். 

அவ்வாறான சூழ்நிலைக்கு முகம்கொடுத்த முதலாவது ஜனாதிபதியாக  தானே உள்ளதாக தெரிவித்த அவர்,  மாகதுரே மதூஷ் போன்ற பாதாள குழுவின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்தமையால் தன்னை கொலைச் செய்வதற்கான பாதாள குழு உறுப்பினர்களால் மேற்கொள்படும் முயற்சிகள் அன்றுபோலவே இன்றும் தொடர்கிறது என்றார்.

அத்தோடு, தான் பொலன்னறுவையை மீள உயிர்ப்பித்துள்ளதாகவும்,  அங்குள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க தனக்கான அதிகாரத்தை பெற்றுத்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். 

3 comments:

  1. போதைப் பொருள் ஒழிப்பில் முஸ்லிம்கள் நாடளாவிய ரீதியில் தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து அதனை ஒழிக்க உதவ வேண்டும்.

    ReplyDelete
  2. Your Thottha baba.your one of historic president in our counbad people will get bad result .

    ReplyDelete
  3. Lame excuse to cover your fault.This unfortunate incident should have prevented if you acted as a responsible defence head. On that day you were in Singapore without appointing deputy minster in charge of defence and you didn't return to country where in danger of security.

    ReplyDelete

Powered by Blogger.