Header Ads



சஜித் தரப்பிலிருந்து மற்றுமொருவர் விலகல் - பொதுஜன பெரமுனவுக்கு பல்டியடிப்பு



ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் காலி மாவட்ட வேட்பாளர் டெனட் பனியந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தான் ராஜினாமா செய்ததாகத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பற்றி விமர்சித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆதரவு வழங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தற்போதைய அரசாங்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கௌரவமான மற்றும் குளறுபடியற்ற அரசியலாளர்கள் இலங்கை அரசியலில் தற்போது மிகக் குறைவானவரகளே காணப்படுகின்றனர் என்பதற்கு மங்கள சமரவீரவும் மற்றும் டெனற் பணியந்துவும் எதிரும் புதிருமான அத்தாட்சிகள். இலகுவாக வெற்றிஈட்டவல்ல மங்கள போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். அடுத்தவர் கொள்கையற்று தனது கடசியில் இருந்து விலகி அரசுடன் இணைந்துள்ளார். பலமான எதிர்க்கட்சி தேவையாக இருக்கக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் கட்சி தாவுதல் என்பன எல்லாம் வரவேற்கத்தக்கன அல்ல. பலமான ஆட்சிக் கட்டமைப்புக்கு அரசும் எதிர்த்தரப்பும் மிக அத்தியாவசியமானவை. இவ்விரு அமைப்புகளும் நாட்டு மக்களுககானதே. எனவே மக்களும் அரசியலாளர்களும் தமது நகர்வுகளை மிகவும் கண்ணியமாக அவதானத்துடன் செய்தல் அரசியலில் மிகவும் இன்றியமையாதனவாகும.

    ReplyDelete

Powered by Blogger.