Header Ads



மங்களவின் தீர்மானத்திற்கு இதுவே காரணம் - அவர் தனிநபர் இல்லை, மேற்குலகால் ஆதரவளிக்கப்படும் நபர்

மேற்குலக சக்திகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே மங்களசமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகியிருப்பதற்கு தீர்மானித்தார் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக மங்களசமரவீரவிற்கு ஆதரவளித்து வரும் மேற்குலகசக்திகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்

.மங்களசமரவீர மாத்தறையில் தேர்தலில் போட்டியிட்டால் அதில் அவர் தோல்வியடைவார் என தெரிவித்துள்ள பந்துல குணவர்த்தன அது வெளிநாட்டு சக்திகளின் தோல்வியாகவும் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மேற்குலசக்திகள் போட்டியிடவேண்டாமென அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளன என தெரிவித்துள்ள பந்துலகுணவர்த்தன மங்கள சமரவீர தனிநபர் இல்லை அவர் பல மேற்குலக நாடுகளால் ஆதரவளிக்கப்படும் நபர் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி எதிர்கொள்ளவுள்ள பாரிய தோல்வியை மங்களசமரவீர நன்கு உணர்ந்துள்ளார் இதன் காரணமாக அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளார் எனவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பூருசிங்காவின் வைரஸ் இவரையும் தாக்கியிருப்பது போல் தெரிகிறது. வௌிநாட்டுச் சக்திகள் இல்லாவிட்டால் யாரும் பதவிவிலகமாட்டார்கள். தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் போது எல்லா வைரஸ்களும் மீண்டும் தலைதூக்குகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.