Header Ads



அதிகரித்த மின் கட்டணத்தினால், அவதியுறும் திருகோணமலை மக்கள்

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கொரோனா ஊரடங்கு காலப்பகுதியில் அல்லல் பட்ட திருகோணமலை மக்களுக்கு வழமைக்கு மாறாக அதிகரித்த மின் கட்டண பட்டியல்களால் கிடைக்கப் பெற்றிருப்பதால் மீண்டும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு வழமையாக கிடைக்கும் மின் கட்டணங்களை விட அதிகரித்த கூடுதலான கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இன்னும் சிலருக்கு எவ்வித மின் கட்டண நிலுவைகளும் இன்றி நூற்றுக்கு நூறு வீத மின் கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவிய ஊரடங்கு காலப்பகுதியில் வீட்டின் மின் பாவனை குறைவாகவே காணப்பட்டதுடன் தொழில் செய்ய முடியாது வருமானமின்றி அசெளகரியப்பட்ட மக்களுக்கு அதிகரித்த மின் கட்டணம் பேரிடியாகவே அமைந்து உள்ளது.

எனவே இந்த நிலையில் அரசாங்கம் சலுகைகளை தராவிட்டாலும் பரவாயில்லை நியாயமான கட்டணத்தை அறவிட ஆவன செய்ய வேண்டும் என்று மக்கள் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றனர்.

2 comments:

  1. இது திருகோணமலை மாவட்ட மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மாவட்ட மக்களுக்கும் உள்ள ஒரு பிரச்சினை குறிப்பாக கொழும்பு மாவட்டம் இதை யாரிடம் சொல்வது இதற்கு யார் தீர்வு பெற்றுத்தருவது

    ReplyDelete
  2. இவங்க 2 மாசமா கட்டணம் செலுத்த தேவை இல்லை என்றதே வட்டியோட சேர்த்து அறவிடுறதுக்கு தான் போல கிடக்கு.
    பிச்சை வேணாம் நாயை புடி என்ற நிலை தான் மக்களுக்கு.

    ReplyDelete

Powered by Blogger.