Header Ads



மக்களுக்குச் சேவையாற்ற நான், உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன் - ஏ. எல். பாரிஸ்


இன்று அரசியலில் முஸ்லிம்கள்  அனாதையான நிலையில் உள்ளனர்.  முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரே அணியல் நின்றமையால் இன்று பாராளுமன்றத்தில்  ஓர் அமைச்சரவையில் அங்கத்துவமின்றி இருக்கின்றனர். எமது முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் மற்றும் அவர்களது அபிலா சைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுவது  மிக மிக அவசியமாகும். இந்த அரிய சந்தர்ப்பத்தை முஸ்லிம்கள் தவறவிடக் கூடாது  என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். பாரிஸ் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையாலான கூட்டம் கெலிஓய பேல்ட் மண்டபத்தில் கண்டி மாவட்;ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். பாரிஸ் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அமைப்பாளர் மஹிந்த அளுத்தகம கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய  ஏ. எல். எம். பாரிஸ் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையை வைத்தே இம்முறை எந்தளவுக்கு ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி மதிப்பீடு செய்வார்கள். அவர் ஜனாதிபதி தேர்தலிலும் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. இந்தப் பொதுத் தேர்தலை முஸ்லிம் அரியதொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கண்டி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் கட்சி வேட்பாளர்.

எனவே இத்தேர்தலை முஸ்லிம்கள்  தவறவிட்டால் மீண்டும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்காக  நாங்கள் நிறைய கவலைகளை எதிர்நோக்கிட வேண்டி வரும்.  இன்று 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஒரு பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

பணத்தை விட வாக்குப் பலம் பெறுமதி வாய்ந்தது. அதை வைத்து எவ்வளவு செய்யலாம். எமது அரசிலயல் தலைவர்களான பதியுதீன் மஹ்மூத் எத்தனையோ பேர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினார். அது வாக்குப் பலத்தால் கிடைக்கப் பெற்றவையே. அது பணப்பலத்தாலோ அல்லது வேறு எந்தவொரு பணப்பலத்தாலே செய்ய முடியாது. அதே போன்று தான் எமது மறைந்த அமைச்சர் அஸ்ரப் அவர்கள் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான நியமனங்களை வழங்கினார். அது கூட வாக்குப் பலத்தால் வழங்கப்பட்டவையாகும். ஏ. சி. எஸ். ஹமீத் அவர்கள்  கண்டி, அக்குறணைப் பிரதேசங்களின்  அபிவிருத்தி. இம்மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு வழங்கி தொழில் வாய்ப்புக்களெல்லாம் இந்த வாக்குப் பலத்தினால் வழங்கப்பட்டவை. எனவே இந்த வாக்குப் பலத்தால் செய்ய வேண்டிய விடயங்கள் ஏராளம். இந்த வாக்குப் பலத்தைக் கொண்டு தான் எமது முஸ்லிம் அபிலாiகையும் எண்ணங்களையும் உரிமைகளையும் பாதுகாப்புக்களையும் பெற்றுக் கொள்ளலாம். 

எனவே அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வைத்தே முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு இம்முறை கிடைத்திருக்கிறது என்று கருதுவார்கள். முஸ்லிம்கள் வழங்கும் எனக்கு  வாக்குப்பலம் தான் இந்நாட்டின் ஜனாதிபதி , பிரதமர்  சிங்கள மக்கள் எம்முடைய ஆதரவு அவர்களுக்கு எந்தளவு கிடைத்திருக்கிறது என்று கருவார்கள்.  உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் தான் என்னை ஜனாதிபதி கண்டியில் போட்டியிட வேட்பாளராகக் களமிறக்கி இருக்கிறார். 

யாரும் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக  ஒரு தியாகத்துடன் தான் நான் உங்களிடம் வாக்கு கேட் வந்திருக்கின்றேன்.

இன்று எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும்  ஒரே அணியில் நின்றமையால் எமது அமைச்சரவையில் ஒருவரும் கிடையாது. இன்று முஸ்லிம் அரசியல் அனாதையாகி விட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.