Header Ads



'சரியான பாதையில் இலங்கை' - WHO இலங்கைக்கு பாராட்டு


கொவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதில், இலங்கை சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கண்காணிப்புகள், பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட சிகிச்சை உத்திகள் ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம், கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில், இலங்கை சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து, அவர்களுடன் நெருங்கப் பழகிய நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதன் மூலம், நோயாளர்களை விரைவில் அடையாளம் காண்பதற்கு வழிவகுந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது,

“கொவிட்-19 நெருக்கடி இலங்கையில் ஏற்பட்டதையடுத்து, மே மாதம் 05ஆம் திகதி, அத்தியாவசிய ஆய்வுக்கூட உபகரணங்கள், வைத்தியசாலை உபகரணங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை, உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது.

“இலங்கையில் கொவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்களை  நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட  கொள்முதலுக்கு 800,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

“விரைவான கண்காணிப்புக்கு ஆதரவு வழங்கும் பொருட்டும் சமூக கண்காணிப்புகளை வலுப்படுத்துவதற்காகவும் பிராந்திய தொற்று நோயியில் நிபுணர்களுக்கு, தொழில்நுட்பக் கருவிகளும் இவற்றுள் உள்ளடங்குகின்றன.

இந்நிலையில், இந்த நோயைக் கட்டுப்படுத்தல், தணித்தல் பற்றிய விரிவான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, இன்னொருவரிடமிருந்து மற்றொருவருக்கப் பரவுவதைத் தடுக்கும் குறிக்கோளுடன், சரியான திட்டத்தை இலங்கை செயற்படுத்தி வருகின்றது” என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.