Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள், புத்தரின் உன்னத போதனைகளுக்கு முரணானவை - சஜித்


(நா.தனுஜா)

நாட்டில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் மிகவும்  அருவருக்கத்தக்கவை என்பதுடன், கௌதம  புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள  இனவாதமானது எமது தாய்நாட்டின் மக்கள் மத்தியில் இன, மத, சமூகப்பிரிவினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இது எமது தேசிய நலனுக்கு எதிரானதும்இ அதற்குக் குந்தகம் விளைவிப்பதும் ஆகும்.

மனிதத் தன்மைக்கும், உயர் மனித விழுமியங்களுக்கும் கூட அது எதிரானது.  எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை. நம் அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியவை.  

இத்தகைய வெறுக்கத்தக்க செயற்பாடுகள் கௌதம  புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவையாகும். ஆசீர்வதிக்கப்பட்ட அந்தப் போதனைகளுக்குத் தவறான அர்த்தம் கற்பிப்பதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் அவற்றுக்கு எதிரான குற்றமாகவும் தேசத்துரோகமாகவுமே அமையும்.

3 comments:

  1. ஆடு நனையுது என்று
    ஓநாய் அழுவுது...
    ஐயோ பாவம்..!!!

    ReplyDelete
  2. Khan R உமக்கு நாகரீகமும் மனிதப் பண்பும் இல்லை என்பதுடன் நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதை புரியாத ஜடமாக இருக்கிறாய்.எதை எப்போது எப்படி அணுகுவது,கருத்துரைப்பது என்பதை முதலில் கற்றுக்கொள்.

    ReplyDelete
  3. சிங்கள மக்களின் வாக்கினை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து பெறவேண்டுமாயின் தமிழ் முஸ்லீங்களை ஒதுக்கி வைத்திருக்கும் பிரமையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறுபான்மையினருடன் நெருங்கும் போது இழக்கும் வாக்கினைவிட பெறும் வாக்குகள் அதிகமாக இருக்கும் எனக்கணக்கு வந்தால் அதனைச் செய்வார்கள். தற்போது தமிழ் கூட்டமைப்புடன் நெருங்குவது அந்தக் கணக்குத்தான். அதே நேரத்தில் சிங்கள மக்கள் எதிரியாகப்பார்க்கும் ஒரு சமூகத்துக்கு சங்கடங்களை ஏற்படுத்தி அதனை எதிர்த்து அறிக்கை விடுவோரை அம்மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்கச் செய்வது இராஜதந்திர விளையாட்டப்பா. அரசியல் இராஜதந்திரம் புரிந்தோர் அடிக்கடி அறிக்கை விடமாட்டார்கள். முந்திக் கொண்டு அடிக்கடி அறிக்கைகள் விட்டு மாட்டிக்கொண்டு தற்போது அடக்கி வாசித்துக்கொண்டிருக்கின்ற தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகளை சற்று உன்னிப்பாக அவதானித்தால் புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.