Header Ads



முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருந்தனர் - சுமந்திரன்

தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளின் போது முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருந்தனர். அவர்கள் செய்த அதே தவறை கூட்டமைப்பு செய்ய தயாராக இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

‘அரசியல் தீர்வு மிக முக்கியமானது காரணம் எம் இனத்தின் எல்லா விடயங்களும் அதில் தங்கியுள்ளது. கடந்த ஆட்சியில் அதற்காக எடுக்கப்பட்ட விடயங்களை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் சாத்தியமாக்கி கொள்ள முயற்சிப்போம்.

தமிழ் மக்களின் பொருளாதார மீள் எழுச்சி விடயத்திற்கு ஒரு வருட காலத்திற்குள் தீர்வு காணும் திட்டம் எம்மிடம் உள்ளது.

அதற்கான விடயங்களை எந்த அரசாங்கமாக இருந்தாலும் பேசுவதற்கு தயார். அதிதீவிரமாக எம்மை அழுத்திக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளையும்

இதற்கு சமாந்தரமாக முன்னெடுப்போம். குறிப்பாக அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு ஆறு மாதங்களுக்குள் தீர்வை பெற்றுக் கொடுப்போம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை சற்று கடினமானது. என்றாலும் அந்த பிரச்சினைக்கு நீதி கிடைக்க பாடுபடுவோம்.

தமிழர் விடுதலை கூட்டணியின் பிறப்பிடம் மலையகமாக இருந்தாலும் மலையக மக்களின் நீதி, நியாய விடயங்களில் கூட்டமைப்பு காட்டும் அக்கறை போதாது.

எனவே இந்த விடயத்தில் எம்மை திருத்திக்கொள்ள வேண்டும். அண்மையில் பிரதமருடனான சந்திப்பின் போது அரசியல் தீர்வு குறித்தும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் பேசினோம்.

அப்போது பிரதமர் விடுவிக்கப்படாதுள்ள அரசியல் கைதிகளின் விபரங்களை தருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கமைய நாளை (12) இரவு 7.30 க்கு அது தொடர்பான விபரங்களை பிரதமரிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கின்றேன்.

தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளின் போது முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருந்தனர் அவர்கள் செய்த அதே தவறை கூட்டமைப்பு செய்ய தயாராக இல்லை.

தற்போது கொவிட் 19 தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் வாதாட உள்ளேன். பொதுத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன்’என்றார்.

5 comments:

  1. வாழ்த்துக்கள் Sir.

    ReplyDelete
  2. ஏமாற்று அரசியல் செய்ய தயாரில்லாதவர் என்பதனை பல முறை செயற்படுதியுள்ளார். எந்தப் பேச்சுவார்த்தையின் போதும் விட்டுக்கொடுப்பு அவசியமானது என்ற யதார்த்தத்தைப் புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான் போராட்டத்தின் போது ஏற்பட்ட வழுக்களை பதிவு செய்து எதிரியை வழி(க்)கெடுக்க விழைகின்றார். ஏமாற்று அரசியல் செய்து பிழைப்பு நடத்துவோர் சாமான்ய மக்களின் அறியாமை என்னும் மூலதனத்தில் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள பித்தலாட்ட அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

    ReplyDelete
  3. BRAVE SIR , ALLAH WILL HIDAYATH(GOOD PATH ) YOU ,

    ReplyDelete
  4. அய்யா சுமந்திரன் அவா்களே! முஸ்லிம்களுக்கு புலிகள் செய்த அனியாயங்கள் நீங்கள் அறியாத விடையம் அல்ல, அதனால் தான் முஸ்லிம் தலைமைகள் மௌனிகளானார்கள்

    ReplyDelete
  5. புலிகள் Muslim மக்களுக்கு செய்த மிகப் பெரும் அக்கிரம்தான் அப்போது Muslim தலைமைகளின் மொனத்துக்கான காரனம்.ஆனால் Muslim மக்கள் தமிழர்கலினை கொலை செய்து,வாழ்ந்த இடங்கலை விட்டு விரட்டி,சொத்துக்களை சூறையாடவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.